Vikatan.com

www.vikatan.com would like to send you push notifications.

Notifications can be turned off anytime from browser settings.

''நான் ஆன்லைனில் பொருட்களை வாங்குவதே இல்லை'' அலிபாவாவின் ஜாக் மா!

 ''நான் ஆன்லைனில் பொருட்களை வாங்குவதே இல்லை'' அலிபாவாவின் ஜாக் மா!

 
உலகையே ஆன்லைனில் பொருளை வாங்க வைத்து அதன் மூலம் சீனாவின் நம்பர் ஒன் பணக்காரர் ஆகியிருக்கும் அலிபாபா.காம் நிறுவனத்தின் நிறுவனர் ஜாக் மா. சமீபத்தில் கலந்து கொண்ட நிகழ்ச்சி ஒன்றில் நீங்கள் நம்பமாட்டீர்கள் நான் ஆன்லைனில் பொருட்களை வாங்குவதே இல்லை. ஆனால் என் மனைவி வீட்டுக்கு தேவையான அனைத்து பொருட்களையும் வீட்டிலிருந்தபடியே வாங்கிவிடுகிறார் என்று கூறியுள்ளார்.
 
ஆனால் அவரது இந்த பழக்கம் எந்தவிதத்திலும் அவரது தொழிலில் எந்த பாதிப்பையும் ஏற்படுத்தவில்லை என்பது தான் உண்மை. ஒரு மணிநேரத்திற்கு 20 டாலர் அதாவது இந்திய மதிப்பில் சுமார் 1300 ரூபாய் சம்பாதிப்பவராக இருக்கிரார். இ-காமர்ஸ் துறையில் அலிபாபாவின் போட்டியாக கூறப்படும் அமேசான் 20 வருடங்களில் சம்பாதித்த பணத்தை 90 நாட்களில் சம்பாதிக்கும் என்று கூறுகின்றனர்.
 
ஆன்லைன் வர்த்தகத்தில் தனித்து விளங்கும் அலிபாபா நிறுவனத்தின் நிறுவனர் பெரிய வர்த்தக குடும்பத்தில் பிறந்தவரோ அல்லது மிகப்பெரிய சொத்து உள்ளவரோ அல்ல. ஆங்கில ஆசிரியர் என்பது தான் வியத்தகு செய்தி.
 
விகடன் இதழ்கள் மற்றும் இ-புத்தகங்களை உங்கள் மொபைலில் படிக்க புதிய Vikatan APP

MUST READ