Vikatan.com

www.vikatan.com would like to send you push notifications.

Notifications can be turned off anytime from browser settings.

கமாடிட்டி A-Z தொடர் 15

  கமாடிட்டி வியாபாரம் 15


தி.ரா.அருள்ராஜன் 

தலைவர், எக்ட்ரா பங்குச் சந்தை பயிற்சி நிறுவனம்.

 

கமாடிட்டி டிரேடிங்கில் அப் சுவிங் முறையில் எங்கு வாங்கி விற்க வேண்டும் என்று பார்த்தோம்.  இனி டவுன் சுவிங்கில் எப்படி பணம் பண்ண எங்கு விற்று வாங்குவேண்டும் என்று பார்ப்போம்.

 

டவுன் சுவிங்கை உபயோகிக்கும் நோக்கம்:
சந்தையில் ஒரு குறிப்பிட்ட பொருளின் விலை தற்போதைய விலையில் இருந்து கீழ் நோக்கி செல்லும் நாம் நம்பும்போது விற்றுவிட்டு பின்பு, எதிர்பார்த்தபடி கீழே இறங்கியபின் வாங்கி லாபம் பார்ப்பது ஆகும்.
அப் சுவிங்கை நாம் விளக்கமாக பார்த்தபடியே இங்கும், அதாவது டவுன் சுவிங்கிலும் நான்கு பகுதிகள் உண்டு.
 1. மேலிருந்து கீழே திசை திரும்பும் பகுதி
 2. இறக்கப்பகுதி
 3. இறக்கம் முடிந்து திசை திரும்பும் பகுதி
 4. ஏற்றப்பகுதி
 
 
 
 
மேலிருந்து கீழே திசை திரும்பும் பகுதி:
 
விலையின் நகர்வு அலைகள் போல் இருக்கும் என்று கூறி இருந்தேன்.  மேலே உள்ள படத்தில் முதல் பகுதியில், விலையானது, மேலிருந்து கீழ்நோக்கி இறங்க ஆரம்பித்துள்ளது.  பொதுவாக விலை இறங்கினால், தொடர்ந்து இறங்கும் என்பதும், ஏறினால், தொடர்ந்து ஏறும் என்பதும் ஒரு அடிப்படை.  அந்த அடிப்படையில், விலையானது, மேலிருந்து கீழ்நோக்கி திரும்ப ஆரம்பிக்கும்போது, இறங்கும் என்பதும் ஒரு எதிர்பார்ப்பு.  இந்த பகுதியைதான் மேலிருந்து கீழே திசைதிரும்பும் பகுதி என்று அழைக்கிறோம்.
 
இந்த கீழே திரும்பும் பகுதியைதான், நாம் விற்று வாங்குவதற்க்கு ஏற்ற இடமாக கருதலாம்.  இந்த இடத்தில் ஷாட் செய்வதற்கு திட்டமிடலாம்.
 
இறக்கப்பகுதி:
 
பொதுவாக பங்குசந்தையாகட்டும் அல்லது கமாடிட்டி சந்தையாகட்டும், ஷாட் அடித்த பிறகு, இந்த இறக்கத்தைதான் ஆவலோடு எதிர்பார்ப்போம்.  நாம் எதிர்பார்த்தபடியே இறங்க ஆரம்பிக்கும்போது நம் லாபம் கூட ஆரம்பிக்கிறது.  இந்த இறக்கம் லாபத்தை கொடுக்கும்போது உடனடியாக லாபத்தை எடுத்துவிடலாமா?  என்ற கேள்விக்கு, ஒரு சுவிங் டிரேடராக உடனடியாக ஆம் என்று சொல்லமுடியாது.  ஏனெனில் ஒரு சுவிங் டிரேடர், அந்த சுவிங் முடியும்வரை காத்திருந்து அதிக லாபம் எடுப்பதுதான் நமது நோக்கம்.  எனவே இறங்கம் தொடரும்வரை நாம் காத்திருப்பதே உசிதம்.  
இறக்கம் முடிந்து மேல்நோக்கி திரும்பி ஏறும் பகுதி:
 
நாம் ஷாட் அடித்துவிட்டு, இறக்கத்திற்காக காத்திருக்கும்போது, இந்த இறக்கம் நிகழ்ந்து கொண்டு இருக்கிறது.  எப்போது, லாபத்தை நாம் வெளியே எடுக்கலாம் என்று காத்திருக்கும்போது,  நடப்பு இறக்கம் முடிந்துவிட்டதாக எடுத்துக்கொள்ளலாம்.  
 
ஒரு டவுன் சுவிங்கின் அதிகபட்ச இறக்கம் நிகழ்ந்துவிட்டது எனலாம். இந்த இறக்கம் முடிந்து மேல்நோக்கி திரும்பும்போது,  நாம் ஷாட்டை கவர் செய்து,  லாபத்தை வெளியே எடுக்கலாம்.  
 
ஒரு சுவிங் டிரேடராக நாம் விற்று வாங்கும் முறையில் விற்றதை, இங்கு வாங்கி நம்முடைய வியாபாரத்தை முடிவுக்கு கொண்டு வரலாம்.
 
ஏற்றப் பகுதி:
 
பங்கு சந்தையிலோ அல்லது கமாடிட்டி சந்தையிலோ நாம் ஷாட் அடித்துவிட்டு காத்திருக்கும்போது,  நாம் விருபப்படாத பகுதிதான் இந்த ஏற்றப் பகுதி.  டவுன் சுவிங்கில், நாம் ஷாட் அடித்து விட்டு காத்திருக்கும்போது, மேலே பார்த்த, கீழுந்து மேலே திசை திரும்பும் பகுதியில் நாம் லாபத்தை வெளியே எடுத்திருக்க வேண்டும்.  அவ்வாறு எடுக்காமல், தொடர்ந்து காத்திருக்கும்போது, விலையானது மேலே ஏற ஆரம்பிக்கிறது.  
 
இந்த ஏற்றமானது, நாம் ஷாட் அடித்த்தால் வந்த லாபத்தை கரைத்துக்கொண்டு இருக்கும்பகுதி.  இன்னும் கொஞ்சம் காத்திருக்கலாம் என்று காத்திருக்கும்போது, இந்த ஏற்றம், மொத்த லாபத்தையும் இழந்து, வாங்கிய விலைக்கேகூட வந்துவிடும்.
 
இந்த பகுதிதான் உணர்வு ரீதியாக பெருமளவு பாதிக்கக்கூடிய இடம் ஆகும். அதற்க்குதான் கண்ணில் பார்த்த லாபம் கணக்கில் வரவேண்டும் என்று தொடர்ந்து எழுதி வருகிறேன்.  ஆனாலும், நம் மனம் இன்னும் கூடுதல் லாபம் வரும் என்று காத்திருக்க செய்யும்போது, கண்ணில் பார்த்த லாபம் காணமல் போகும்போது, நாம் மனதளவில், சற்றே கலங்கி போகிறோம்.
 
ஒரு டவுன் சுவிங்கின் நான்கு நிலைகளை விரிவாக பார்த்தோம்.  இந்த கான்செப்டை நான் கமாடிட்டி சந்தையில் ஒரு எடுத்துக்காட்டுடன் பார்க்கலாம்.
 
தங்கம்: தினசரி வரைபடம்
 
 
மேலே உள்ள வரை படத்தில், தங்கம் ஒரு டவுன் சுவிங்கில் எவ்வாறு செயல்படுகிறது என்பதை காண்கிறோம். நாம் பார்த்த நான்கு நிலைகளும் இதில் தெளிவாக தெரிகிறது. முதல் நிலையான ஏற்றத்தில் இருந்து இறக்கமாக திசை திரும்பும் பகுதியை பார்க்கிறோம்.  
 
இந்த திசை திருப்பத்திற்கு பிறகு தங்கம் வெகுவாக இறங்க ஆரம்பித்துள்ளது.  இந்த இறக்கம் சுமார் 18 வேளை நாட்களுக்கு  நீடித்தது.  இது ஒரு பெரிய டவுன் சுவிங் ஆகும்.  இந்த டவுன் சுவிங்கில் தான் நான் ஷாட் பொஷிஷனை ஆரம்பிக்கிறோம்.  பின் இந்த டவுன் சுவிங் தொடரும் வரை நாம் ஷாட் பொஷிஷனை தொடர்ந்து வைத்துக் கொள்கிறோம்.  இந்த இறங்குமுகமான பயணம் ஒரு இடத்தில் முடிவுக்கு வருகிறது.  இதுதான் மூன்றாவது நிலையான கீழுருந்து மேலே திசைதிரும்பும் நிலை ஆகும்.  இந்த இடத்தில்தான் நாம் ஷாட் பொஷிஷனை முடிவுக்கு கொண்டுவர வேண்டும்.  பின் நான்காவது,  நிலையான ஏற்றம் நிகழ்கிறது.
 
 
 
நாம் டவுன் சுவிங்கில் பார்த்த, அந்த நான்கு நிலைகளையும் இப்போது ஒரு மணிநேர வரைபடத்திலும் தெளிவாக பார்க்கலாம்.
 
 
மேலே உள்ள வரைபடத்தில் இரண்டு முழு நாட்களும், பின் மூன்றாவது நாளின் முதல் நான்கு மணிநேரமும் இந்த வரைபடத்தில் உள்ளது.  இதை உற்று நோக்கினால், முதல் நாளின் முற்பகுதியில் தங்கத்தின் விலை வலிமையாக ஏறிக்கொண்டு இருப்பதை பார்க்கலாம்.  ஆனால், அந்த நாளின் பிற்பகுதியில் தங்கத்தின் விலை, ஏற்றத்தில் இருந்து விடுபட்டு கீழ்நோக்கி இறங்க ஆரம்பித்துள்ளதை காணலாம். இந்த திசை திரும்பும் பகுதியே விற்று வாங்குவதற்கு தகுந்த இடமாக பார்க்கலாம்.  மேலிருந்து கீழ்நோக்கி திசை திரும்பி, நன்கு இறங்க ஆரம்பித்துள்ளது.  இந்த இறக்கமானது, முதல்நாள் முடிவில் இறங்க ஆரம்பித்து, பின்னர் இரண்டாம் நாள் முழுவதும், இறங்கித் துவங்கி இறங்கியே பெரும்பாலும் வியாபாரம் ஆனது.  
 
ஆனால், இரண்டாம் நாள் முடியும் தருவாயில், இறக்கம் முடிந்து மேல்நோக்கி திசை திரும்ப ஆரம்பித்துள்ளதை காணலாம்.  இதுதான் மூன்றாவது நிலை ஆகும்.  இந்த மேல்நோக்கி ஏற்றம்.  அடுத்து மூன்றாவது நாள் நன்கு ஏற ஆரம்பித்துள்ளது.
 
இதுவரை டவுன் சுவிங்கில், இறங்குமுகமாக இருந்த தங்கத்தின் விலை மூன்றாம் ஆரம்பத்தில் இருந்து ஏறுமுகமா மாறி உள்ளது.
 
இந்த டவுன் சுவிங் டிரேடிங்கை பற்றி நாம் படிக்க ஆரம்பிக்கும்போது, நான்காவது நிலையில் நாம் ஷாட் பொஷிஷனை கவர் பண்ணவேண்டும் என்று படித்தோம் அல்லவா!
 
அப்படி கவர் பண்ணாவிட்டால், என்னவாகும் என்பதையும் அடுத்த வரைபடத்தில் பார்க்கலாம்.
 
மேலே உள்ள வரைபடத்தில், நான் ஏற்கெனவே தெளிவாக பார்த்த நான்கு நிலைகளை தாண்டி அடுத்த என்ன நடக்கலாம் என்றும் பார்க்கிறோம்.  நிலை ஒன்றில் மேலே இருந்து கீழ்நோக்கி இறங்கிய பிறகு, நிலை நான்கு என்பது, கீழ்நோக்கிய இறக்கம் முடிந்து, மேல்நோக்கிய பயணத்தை காட்டுகிறது.  ஒரு வேளை நாம் ஷாட்டை கவர் பண்ணி வெளியேறாமல் இருந்தால், இந்த வரைபடத்தில், ஏற்றம் தொடர்ந்து நிகழ்ந்து, நாம் ஷாட் அடித்து இருக்கக்கூடிய நிலை ஒன்றையும் தாண்டி ஏறி முடிந்துள்ளதை காணலாம்.  அதாவது நாம் கண்ணில் பார்த்த அத்தனை லாபமும், எடுக்காமல் விட்டதால், முழுவதும் கண் முன்னாலேயே கரைந்துவிட்டது.
 
தங்கம் 15 நிமிட வரைபடம்:
 
 
இந்த வரைபடத்திலும் நாம் டவுன்சுவிங் நிகழ்வை பார்க்கலாம்.
 
மேலே உள்ள தங்கத்தின் 15 நிமிட வரைபடத்தில், நாம் ஏற்கெனவே தினசரி வரைபடம் மற்றும் ஒரு மணிநேர வரைபடத்தில் பார்த்தது போல், நான்கு டவுன் சுவிங் நிலைப்பாடுகளையும் தெளிவாக பார்கிறோம்.  இந்த இறக்கம் முடிந்த பிறகு, மேலே வலிமையாக ஏற ஆரம்பிப்பதையும் பார்க்கிறோம்.  இந்த ஏற்றம் நிகழும்போது, நாம் ஷாட்டை கவர் பண்ணவேண்டும் என்று ஏற்கெனவே சொல்லி இருந்தேன்.  ஒருவேளை ஷாட்டை நாம் கவர் பண்ணாவிட்டால், என்ன நடக்கலாம்?
 
 
நாம் இதுவரை பார்த்துவந்த 15 நிமிட வரைபடத்தின் தொடர்ச்சியைதான் இப்போது பார்க்கிறோம்.  நாம் நான்காவது நிலையில் ஷாட்டை கவர்பண்ணாவிட்டால், பின் தங்கத்தின் வலிமையாக ஏறுவதை நாம் இந்த வரைபடத்தில் பார்க்கிறோம். இந்த ஏற்றமானது, நாம் ஏற்கெனவே ஒன்று என்று குறியிட்ட திசை திருப்ப புள்ளியையும் தாண்டி ஏற ஆரம்பித்துள்ளதை காண்கிறோம்.
 
இங்கு நடப்பது என்ன?
 
டவுன் சுவிங்கை அடையாளம் கண்ட நாம், சரியான இடத்தில் ஷாட் அடித்தும்கூட, அடுத்து பெரிய லாபத்தை க்ண்ணில் பார்த்தும்கூட, அதை சரியான நேரத்தில் எடுக்காதலால், அதன் அடுத்த கட்ட ஏற்றமானது, அத்தனை லாபத்தையும் இழக்க செய்துள்ளது.  இது ஒரு கட்டம்தான்.  இதற்கு அடுத்து, ஷாட் அடித்து மொத்த லாபமும் போய்,  தங்கத்தின் விலை வலிமையாக மேலே ஏறும்போது, புதிய நஷ்டமும் ஏற்பட ஆரம்பிக்கிறது.  நாம் விற்காமால் தொடர்ந்து வைத்திருக்கும்போது,  சந்தைக்கு எதிராக நாம் சண்டை போடும் நபராக மாறுகிறோம்.
ஆகவே ஒரு சுவிங்  டிரேடராக நாம் செயல்படும்போது, அந்த சுவிங் முடிந்து அடுத்த சுவிங் ஆரம்பிக்கும்போது, நாம் கையில் இருக்கும் பொஷிஷனை முடிவுக்கு கொண்டு வருவது நல்லது.
ஆனால், நாம் அவ்வாறு செய்யாமல், இருக்கும்போது நம்முள் நிகழும் மாற்றங்களும், அதன் விளைவுகளையும் அடுத்த வாரம் பார்க்கலாம்.
 
விகடன் இதழ்கள் மற்றும் இ-புத்தகங்களை உங்கள் மொபைலில் படிக்க புதிய Vikatan APP

MUST READ