Vikatan.com

www.vikatan.com would like to send you push notifications.

Notifications can be turned off anytime from browser settings.

[X] Close

ஏற்றத்தில் முடிந்த இந்திய சந்தைகள்!!

இன்றைய நாளின் முடிவில் இந்திய பங்குச்சந்தைகள் ஏற்றத்தில் முடிவடைந்துள்ளன. மும்பை பங்குச்சந்தை சென்செக்ஸ் 248 புள்ளிகள் அதிகரித்து 27346 புள்ளிகள் என்ற அளவிலும். தேசிய பங்குச்சந்தையான நிஃப்டி 78 புள்ளிகள் அதிகரித்து 8169 என்ற அளவிலும் வர்த்தகமாகி வருகிறது.
 
அமெரிக்க டாலருக்கு நிகரான இந்திய ரூபாயின் மதிப்பு 61.45 ரூபாயாக உள்ளது. 10 கிராம் தங்கத்தின் விலை 1.1% குறைந்து 26,769 ரூபாயாக உள்ளது.
 
மதிய நிலவரம்:
 
மதியம் 2:45 மணி நிலவரப்படி மும்பை பங்குச்சந்தை சென்செக்ஸ் 171 புள்ளிகள் அதிகரித்து 27269 புள்ளிகள் என்ற அளவிலும். தேசிய பங்குச்சந்தையான நிஃப்டி 54 புள்ளிகள் அதிகரித்து 8144 என்ற அளவிலும் வர்த்தகமாகி வருகிறது.
 
அமெரிக்க டாலருக்கு நிகரான இந்திய ரூபாயின் மதிப்பு 61.45 ரூபாயாக உள்ளது. 10 கிராம் தங்கத்தின் விலை 1.3% குறைந்து 26,752 ரூபாயாக உள்ளது.
 
காலை நிலவரம்:
 
இந்திய சந்தைகள் இன்று(30.10.2014) காலை 9:15 மணி நிலவரப்படி ஏற்றத்தில் துவங்கியுள்ளன. மும்பை பங்குச்சந்தையான சென்செக்ஸ் 35 புள்ளிகள் அதிகரித்து 27113 என்ற அளவிலும், தேசிய பங்குச்சந்தையான நிஃப்டி 9 புள்ளிகள் அதிகரித்து 8099 என்ற அளவிலும் வர்த்தகமாகி வருகின்றன.
 
அமெரிக்க டாலருக்கு நிகரான இந்திய ரூபாயின் மதிப்பு 61.44 ரூபாயாக உள்ளது. 10 கிராம் தங்கத்தின் விலை 27,079 ரூபாயாக உள்ளது.
விகடன் இதழ்கள் மற்றும் இ-புத்தகங்களை உங்கள் மொபைலில் படிக்க புதிய Vikatan APP
Advertisement
Advertisement
Advertisement

MUST READ

Advertisement
Advertisement
[X] Close