Vikatan.com

www.vikatan.com would like to send you push notifications.

Notifications can be turned off anytime from browser settings.

இந்தியாவில் பட்டினி விகிதம் குறைந்தது!

 இந்தியாவில் பட்டினி விகிதம் குறைந்தது!

 
உலக பட்டினி குறியீடு(World Hunger Index) அறிக்கையின்படி இந்தியாவில் பசியால் பட்டினியில் வாடுபவர்களின் சதவிகிதம் இந்த ஆண்டு குறைந்துள்ளது என்று கூறப்பட்டுள்ளது. 
 
ஒவ்வொரு ஆண்டும் எடை குறைவாக உள்ள குழந்தைகளின் எண்ணிக்கை, ஊட்டச்சத்து குறைவாக உள்ளவர்களது எண்ணிக்கை ஆகியவற்றையும், ஆண்டுக்கு பசியால் வாடும் வறுமைக்கோட்டுக்கு கீழ் வாடுபவர்களது எண்ணிக்கையும் கொண்டு இது கணக்கிடப்படுகிறது.
 
சென்ற ஆண்டு இந்த தரவரிசையில் 63வது இடத்தில் இருந்த இந்தியா தற்போது 55வது இடத்துக்கு முன்னேறியுள்ளது. அண்டை நாடுகளான பாகிஸ்தான் மற்றும் பங்களாதேஷ் 57வது இடத்தை பகிர்ந்துள்ளன. 
 
இவர்களைவிட முன்னனியில் இருந்தாலும் நேபாளம்(44) மற்றும் இலங்கை (39) ஆகியவற்ரை விட இந்தியா பின்தங்கியுள்ளது குறிப்பிடத்தக்கது.இந்த அறிக்கையின்படி இந்தியா 8 தரவரிசை முன்னேறியுள்ளது.இந்த அறிக்கையின் படி எடைக்குறைவாக உள்ள குழந்தைகளின் எண்ணிக்கை விகிதம் 2005-06ல் 43.5 சதவிகிதமாக இருந்தது. தற்போது அது குறைந்து 30.7 சதவிகிதமாக உள்ளது.
விகடன் இதழ்கள் மற்றும் இ-புத்தகங்களை உங்கள் மொபைலில் படிக்க புதிய Vikatan APP

MUST READ