Vikatan.com

www.vikatan.com would like to send you push notifications.

Notifications can be turned off anytime from browser settings.

[X] Close

இமாமி: நிகர லாபம் 20.4% அதிகரிப்பு..!

வேகமாக வளர்ந்துவரும் ஹெல்த்கேர் நிறுவனங்களில் இமாமி நிறுவனமும் ஒன்று. போரோபிளஸ், நவரத்னா, ஃபேர் அண்டு ஹேண்டுசம், ஜண்டு பாம், மெந்தா பிளஸ் பாம் போன்ற பொருட்களை இந்த நிறுவனம் வர்த்தகப்படுத்தி வருகிறது. தற்போதைய நிலையில் இந்த நிறுவனத்தின் மார்க்கெட் கேப்பிடலைசேஷன் 17,839.65 கோடி ரூபாய். இந்த நிறுவனம் 2014-15-ம் ஆண்டின் இரண்டாவது காலாண்டு முடிவை சமீபத்தில் வெளியிட்டது. 

இந்த இரண்டாவது காலாண்டில் இந்த நிறுவனத்தின் நிகர லாபம் இதற்கு முந்தைய நிதி ஆண்டின் இரண்டாம் காலாண்டுடன் ஒப்பிடும் போது 20.4% அதிகரித்துள்ளது. அதே போல தேய்மானம் மற்றும் வரிக்கு முந்தைய வருமானம் 29.6% -ஆகக அதிகரித்துள்ளது. வரிக்கு பிந்தைய லாபம் 16% அதிகரித்துள்ளது. இந்த நிறுவனம் தனது முதலீட்டாளர்களுக்கு ஒரு பங்குக்கு நான்கு ரூபாய் வீதம் இடைக்கால டிவிடெண்ட் வழங்கி இருக்கிறது. 

விகடன் இதழ்கள் மற்றும் இ-புத்தகங்களை உங்கள் மொபைலில் படிக்க புதிய Vikatan APP
Advertisement
Advertisement
Advertisement
Advertisement
Advertisement
[X] Close