Vikatan.com

www.vikatan.com would like to send you push notifications.

Notifications can be turned off anytime from browser settings.

சென்செக்ஸ்,நிஃப்டி புதிய உச்சம்: ஐடி துறை பங்குகள் அதிகரிப்பு!

சென்செக்ஸ்,நிஃப்டி புதிய உச்சம்: காலாண்டு முடிவுகள் காரணமா? 

இன்றைய மார்க்கெட் முடிவில் இந்திய பங்குச் சந்தை குறியீடுகளான சென்செக்ஸ் மற்றும் நிஃப்டி புதிய உச்சங்களை தொட்டு வர்த்த்கமானது. இன்றைய நாளின் முடிவில் சென்செக்ஸ் 519 புள்ளிகள் அதிகரித்து 27865 என்ற அளவிலும். தேசிய பங்குச்சந்தையான நிஃப்டி 153 புள்ளிகள் அதிகரித்து 8322 என்ற அளவிலும் வர்த்தகமாகியது.
 
இன்றைய மார்க்கெட்டில் 1770 பங்குகள் விலையேறியும், 1214 பங்குகள் விலை சரிந்தும் முடிவடைந்தன. 128 பங்குகள் விலையில் மாற்றமின்றி வர்த்தகமாகின. மேலும் சென்செக்ஸ்,  நிஃப்டி இரண்டும் 1.9 சதவிகிதம் அதிகரித்துள்ளன.
 
அமெரிக்க டாலருக்கு நிகரான இந்திய  ரூபாயின் மதிப்பு இன்றைய நாளின் முடிவில் 61.40 ரூபாயாக உள்ளது. 10 கிராம் தங்கம் சந்தைகளின் உயர்வால் 2 சதவிகிதம் குறைந்து 26,067 ரூபாய்க்கு வர்த்தகமாகிறது.
 
முக்கிய நிறுவனங்களின் காலாண்டு முடிவுகளின் தாக்கத்தால் இந்த ஏற்றம் நிகழ்ந்துள்ளதாக கூறப்படுகிறது.
 
2 மணி நிலவரம் : 
 
 இந்திய பங்குச் சந்தைகள் கடந்த இரண்டு நாட்களாக தொடர்ந்து ஏற்றம் அடைந்து வருகிறது. இன்று காலை சந்தை ஏற்றத்திலே துவங்கியது. மேலும் தொடர்ந்து மதியம் 2 மணியளவில் மும்பை பங்குச் சந்தையான சென்செக்ஸ் சுமார் 370 புள்ளிகள் உயர்ந்து 27718 என்ற நிலையில் வர்த்தகமாகி வருகிறது.
 
அதே போல தேசிய பங்குச் சந்தையான நிஃப்டி  108 புள்ளிகள் உயர்ந்து 8279 என்ற நிலையில் வர்த்தகமாகி வருகிறது.  இன்று பல முக்கிய நிறுவனங்களின் காலாண்டு முடிவுகள் வெளியாகி இருப்பது சந்தை ஏற்றுத்துக்கு காரணம் என்கிறார்கள். 
 
ஐடிஎஃப்சி, ஹெச்டிஎஃப்சி, டாடா ஸ்டீல் ஆகிய பங்குகளின் விலை சுமார் 3 சதவிகிதத்துக்கு மேல் அதிகரித்து வர்த்தகமாகி வருகிறது.  பார்தி ஏர்டெல், ஐசிஐசிஐ பேங்க்,ஏசிசி ஆகிய பங்குகளின் விலை சரிந்தும் வர்த்தகமாகி வருகிறது. 
 
10 மணி நிலவரம் : 
 
நேற்று புதிய உச்சங்களை கடந்து வர்த்தகமான சென்செக்ஸ் மற்றும் நிப்டி இன்று சந்தை துவங்கியதிலிருந்தே ஏற்றத்தில் வத்தகமாகின. மும்பை பகுச்சந்தையான சென்செக்ஸ் இன்று சந்தை துவங்கியது 10 மணியளவில் 218 புள்ளிகள் அதிகரித்து 27564 என்ற அளவில் வர்த்தகமாகி வருகிறது. தேசிய பங்குச்சந்தையான நிஃப்டி 63 புள்ளிகள் அதிகரித்து 8200 புள்ளிகளை தாண்டி புதிய உச்சத்தில் வர்த்த்கமாகிறது.
 
ஐடி துறையின் காலாண்டு முடிவுகள் பாசிட்டிவாக அமைந்துள்ளதால் அந்த பங்குகள் விலை அதிகரித்து வர்த்தகமாகின. அத்னால் டிசிஎஸ், இன்ஃபோசிஸ், ஹச்சிஎல் பங்குகளின் விலை அதிகரித்து வர்த்த்கமானது. அதேசமயம் பாரதி ஏர்டெல், ஹின்டால்கோ நிறுவன பங்குகள் விலை குறைந்து வர்த்த்கமாகின.
 
அமெரிக்க டாலருக்கு நிகரான இந்திய ரூபாயின் மதிப்பு  61.36 ரூபாயாக வர்த்தகமாகி வருகிறது. 10 கிராம் தங்கத்தின் விலை 0.15 சதவிகிதம் குறைந்து 26,562 ரூபாய் என்ற அளவில் வர்த்தகமாகி வருகிறது.
 
 
விகடன் இதழ்கள் மற்றும் இ-புத்தகங்களை உங்கள் மொபைலில் படிக்க புதிய Vikatan APP

MUST READ