Vikatan.com

www.vikatan.com would like to send you push notifications.

Notifications can be turned off anytime from browser settings.

"வாட்ஸ்அப் வாரியர்ஸ்" - வலைதளங்களில் வைரலாகும் வாட்ஸ்அப் போராட்டம்

 "வாட்ஸ்அப் வாரியர்ஸ்" - வலைதளங்களில் வைரலாகும் வாட்ஸ்அப் போராட்டம்

 
"உண்ணாவிரத போராட்டம், சாலை மறியல் போராட்டம், கடையடைப்பு போராட்டம் இதெல்லாம் பழைய ஸ்டைல் போராட்டங்கள்! ஆனால் இன்று உணவு கூட இல்லாமல் இருந்துவிடலாம், இண்டர்நெட் இல்லாமல் இருக்க முடியாது. அந்த இண்டர்நெட்டை அணைத்து வை! என்ற வாசகங்களுடன் கிளம்பியுள்ளது ஒரு குரூப்.
 
பால் விலை ஏறியதற்கு கவலைப்பட்டு கொண்டிருக்கிறகும் மக்களுக்கு நடுவே இண்டர்நெட் விலை ஏறியுள்ளது என்று குரல் கொடுக்கிறது ஒரு குழு. அதனால் ஒரு நாள் முழுவதும் இண்டர்நெட்டை பயன்படுத்தாமல் அணைத்து வைத்து போராட காத்திருக்கிறது. இன்று அக்டோபர் 31, இண்டர்நெட்டை பயன்படுத்தாமல் போராட போகின்றனர் வாட்ஸ் ஆப் பயன்பாட்டாளர்கள் என்கிரது அந்த குழு இதனை அனைத்து வாட்ஸ்அப் குரூப்களிலும் புகைப்படமாகவும், ஆடியோவாகவும் பரவு செய்துள்ளனர் இணையதளவாசிகள்.
 
வழக்கமாக இது போன்ற பிரச்னைகளை சமூக வலைதளங்களில் உள்ளவர்கள் தான் கையில் எடுப்பார்கள். ஆனால் இந்த ஒரே வருடத்தில் மட்டுமே 'வாட்ஸ் ஆப் பார்வார்ட்'' சில நல்ல மாற்றங்களை ஏற்படுத்தியுள்ளனர். உதாரணமாக காஷ்மீர் வெள்ளத்தில் மாட்டியவர்களை வாட்ஸ் ஆப் மூலம் காப்பாற்றியது போன்ற செயல்கள் குறிப்பிடத்தக்கது.
 
தற்போது வாட்ஸ் ஆப்பில் வைரல் பரவலாகி இருக்கிறது "ஒரு நாள் இண்டர்நெட்டை அணைத்து வைக்கும் போராட்டம்" அந்த வாட்ஸ் ஆப் பார்வார்டு மெசேஜில் கடந்த ஆண்டு 2007 ஆம் ஆண்டு 2ஜிபி இண்டர்நெட்டின் விலை 30 நாளைக்கு 68 ரூபாயாக ஆக இருந்தது. ஆனால் தற்போது 2ஜிபி இண்டர்நெட்டின் விலை 250 ரூபாயாக இருக்கிறது. இன்னும் இரண்டு வருடங்களில் 250 ரூபாயாக இருப்பது 400  ரூபாயாக மாறும் அதனால் அக்டோபர் 31ஆம் தேதியான இன்று அனைத்து இண்டர்நெட் பயன்பாட்டாளர்களும் ஒரு நாள் முழுவதும் இண்டர்நெட்டை பயன்படுத்தாமல் இண்டர்நெட்டைஅணைத்து வைக்கவும் எனவும் இதன் மூலம் இண்டர்நெட் இணைப்பு தரும் அனைத்து நிறுவனங்களுக்கும் பதிலடியாக இருக்கும் எனக் குறிப்பிடப்பட்டுள்ளது.
 
பெருகிவரும் மக்கள் தொகையில் குடிக்கும் தண்ணீர் முதல் உண்ணும் உணவு வரை அனைத்திற்கும் திண்டாட்டம் ஏற்பட்டு வருகிறது. அதற்காக எவரும் கலப்பை பிடித்து வயலில் இறங்கி உழைத்தப்பாடில்லை. பருவத்தில் மழைநீரை சேமித்தபாடில்லை. ஆனால் இண்டர்நெட் விலையேற்றத்திற்கு ஆதரவாக மட்டும் வேட்டியை வரிந்துகட்டி மல்லுகட்ட வருகின்றனர். அனைத்து அத்தியாவசிய பொருட்களும் தேவை அதிகரித்தமையால் விலை ஏறி வருகிறது. கலப்படம் அனைத்திலும் கலந்துவிட்டது. குழந்தைகளுக்கான அத்தியாவசிய தேவையான பால் விலையேற்றம், காய்கறிகள் விலையேற்றம் எனப் பல பிரச்சனைகள் உண்டு இந்நாட்டில்! ஆனால் இண்டர்நெட் விலையேற்றத்திற்காக மட்டுமே போராடுவது

 என்பது நல்ல குடிமக்களுக்கான அறிகுறி இல்லை! இண்டர்நெட் அனைவரையும் அடிமையாக்கிவிட்டது என இவர்களுக்கு எதிராகவும் ஒரு குழு கொடிபிடித்து வருகிறது.
 
எது எப்படியோ சில நல்ல மாற்றங்கள், பல வதந்திகள்!? என ஏற்கனவே வாட்ஸ் ஆப்பின் மூலம் நடந்திருந்தாலும் இந்த "அக்டோபர் 31-இண்டர்நெட்டை அணைத்து வை போராட்டம்" வெற்றியில் முடியுமா இல்லை தோல்வியில் முடியுமா என்று தெரியவில்லை. ஆனால் தற்போது உள்ள தொழில்நுட்ப வசதியில் இது போன்ற போராட்டங்கள் தலைகாட்ட துவங்கியுள்ளது தான் உண்மை. இதுவரை இணடர்நெட் நன்கு பயன்படுத்த தெரிந்தவர்கள் போராடி வந்த இடத்தில் வாட்ஸ் அப் போன்ற உடனடி ஆப்ஸ்கள் கால்பதித்து கையில் செல்போன் வைத்திருப்பவர்களையெல்லாம் கருத்து கூற வைப்பவர்களாக மாற்றியுள்ளது என்பதும் உண்மையே!
 
 
-கோ.க.தினேஷ் (மாணவ பத்திரிக்கையாளர்)
விகடன் இதழ்கள் மற்றும் இ-புத்தகங்களை உங்கள் மொபைலில் படிக்க புதிய Vikatan APP

MUST READ