Vikatan.com

www.vikatan.com would like to send you push notifications.

Notifications can be turned off anytime from browser settings.

ஏர்டெல் நிகர லாபம் 1,383 கோடி ரூபாயாக அதிகரிப்பு!

இந்தியாவின் மிகப்பெரிய டெலிகாம் ஆப்ரேட்டர் நிறுவனமான ஏர்டெல் நடப்பு நிதி ஆண்டின் இரண்டாவது காலாண்டு முடிவுகளை வெளியிட்டது. இந்த முடிவுகளின் புள்ளி விவரங்கள் தனது நிறுவனத்தின் நிகர லாபம் 170%  வளர்ச்சியை அடைந்திருப்பதாக தெரிவிக்கிறது.

அதாவது, இரண்டாவது காலாண்டின் மூன்று மாதங்களில் (செப்டம்பர், 30-ம் தேதி நிலவரப்படி) நிறுவனத்தின் நிகர லாபம் 1,383 கோடி ரூபாயாக அதிகரித்திருக்கிறது. இது இதற்கு முந்தை காலாண்டில் 512 கோடி ரூபாயாக இருந்தது குறிப்பிடத்தக்கது. மார்ச் 2011-ற்கு பிறகு இந்த நிறுவனத்தின் நிகர லாபம் இந்த அளவுக்கு உயர்ந்திருப்பது கவனிக்க வேண்டிய விஷயமாகும். அதே போல இந்த நிறுவனத்தின் வருவாயும் ஏழு சதவிகிதம் அதிகரித்து 22,845 கோடி ரூபாயாக உள்ளது.

கடந்த மூன்று மாதங்களில் இந்த நிறுவனத்தின் அதிவேக வளர்ச்சிக்கு காரணம் தனது வாய்ஸ் சேவைகள் சார்ந்த வர்த்தகத்தை அதிகப்படுத்தியதும், இந்த நிறுவனத்தின் இன்டர்நெட் டேட்டா சர்வீஸுக்கான சந்தாதாரர்கள் அதிகமானதும் மிக முக்கிய காரணமாகும். இந்த நிறுவனத்தின்  மொபைல் சேவைகள், டெலிமீடிய சேவைகள் மற்றும் டிஜிட்டல் டிவி வளர்ச்சி விகிதங்கள் முறையே 11.3%. 14.4% மற்றும் 23.5% ஆகும். 

விகடன் இதழ்கள் மற்றும் இ-புத்தகங்களை உங்கள் மொபைலில் படிக்க புதிய Vikatan APP