Vikatan.com

www.vikatan.com would like to send you push notifications.

Notifications can be turned off anytime from browser settings.

ஜேஎஸ்டபிள்யூ எனர்ஜி நிகரலாபம் 96% அதிகரிப்பு!

ஜேஎஸ்டபிள்யூ எனர்ஜி நிறுவனம் நடப்பு நிதி ஆண்டின் இரண்டாவது காலாண்டு முடிவுகளை வெளியிட்டது. இதில் சொல்லப்பட்டிருக்கும் புள்ளி விவரங்களின்படி இந்த நிறுவனத்தின் நிகர லாபம் 96% அதிகரித்துள்ளது.

இதற்கு முந்தைய நிதி ஆண்டின் இரண்டாவது காலாண்டில் 162.59 கோடி ரூபாயாக இருந்த இந்த நிறுவனத்தின் நிகர லாபம் தற்போது 318.63 கோடி ரூபாயாக அதிகரித்துள்ளது. அதே போல இந்த நிறுவனத்தின் மொத்த வருமானம் 2,372.28 கோடி ரூபாயாக அதிகரித்துள்ளது. இது இதற்கு முந்தைய நிதி ஆண்டின் இதே காலாண்டில் 2,079.56 கோடி ரூபாயாக இருந்தது.

விகடன் இதழ்கள் மற்றும் இ-புத்தகங்களை உங்கள் மொபைலில் படிக்க புதிய Vikatan APP

MUST READ