Vikatan.com

www.vikatan.com would like to send you push notifications.

Notifications can be turned off anytime from browser settings.

பிஎஃப்சி நிகர லாபம் 11% அதிகரிப்பு!

பவர் ஃபைனான்ஸ் கார்பரேஷன் நடப்பு நிதி ஆண்டின் இரண்டாவது காலாண்டு முடிவுகளை வெளியிட்டது. செப்டம்பர் 30, 2014 நிலவரப்படி இந்த நிறுவனத்தின் நிகர லாபம் 11% அதிகரித்து 1,408.58 கோடி ரூபாயாக உள்ளது. இது இதற்கு முந்தைய ஆண்டின் இதே காலண்டில் 1,273.79 கோடி ரூபாயாக இருந்தது குறிப்பிடத்தக்கது.

அதே போல நிறுவனத்தின் செயல்பாட்டு வருமானமும் 6,304.70 கோடி ரூபாயாக அதிகரித்துள்ளது. இது இதற்கு முந்தைய ஆண்டின் இதே காலாண்டில் 5,333.54 கோடி ரூபாயாக இருந்தது குறிப்பிடத்தக்கது. கடந்த செப்டம்பர் 30 நிலவரப்படி இந்த நிறுவனத்தின் நிகர வாராகடன் 0.77 சதவிகிதமாக உள்ளது. நேற்றைய பங்குச் சந்தை முடிவில் இந்த நிறுவனத்தின் பங்கு விலை 282.35 ரூபாய்க்கு வர்த்தகமாகியுள்ளது.

விகடன் இதழ்கள் மற்றும் இ-புத்தகங்களை உங்கள் மொபைலில் படிக்க புதிய Vikatan APP

MUST READ