Vikatan.com

www.vikatan.com would like to send you push notifications.

Notifications can be turned off anytime from browser settings.

கமாடிட்டி A-Z தொடர் 16

                                    கமாடிட்டி வியாபாரம் 16


தி.ரா.அருள்ராஜன் 

தலைவர், எக்ட்ரா பங்குச் சந்தை பயிற்சி நிறுவனம்.

 

 

சென்ற வாரங்களில் கமாடிட்டி சந்தையில் வியாபாரம் செய்யும் வழிமுறைகளை பார்த்தோம். அதில் அப்சுவிங் வியாபாரம், டவுன்சுவிங் வியாபாரம் என்பதை விரிவாக பார்த்தோம்.

 

சுவிங் வியாபாரம் என்பது, பொருளின் விலையானது தற்போதைய போக்கிலிருந்து மாறும்போது, அதை சுவிங் என்கிறோம். அதாவது, ஒரு பொருளின் விலை இறங்கிக்கொண்டு இருக்கும்போது, இறக்கம் முடிந்து ஏற ஆரம்பிக்கும்போது, நாம் வாங்க ஆரம்பிப்பதைதான் இவ்வாறு அழைக்கிறோம்.

 

இதுவரை நாம் இந்த திருப்பங்களில் வாங்கி விற்பதும், ஏற்றத்தில் இருந்து இறக்கதிற்க்கு மாறும்போது, விற்று வாங்குவதும் பற்றி பார்த்தோம்.

இந்த திருப்பங்களை அடையாளம் காண்பது என்பதற்க்கு பல வழிமுறைகள் இருக்கிறது. அதில் கேன்டல் ஸ்டிக் மூலம் அடையாளம் காணும் முறைகளில் ஒன்றையும் பார்க்கலாம்.

 

கேன்டல் ஸ்டிக் என்பதைபற்றி அறியாதவர்களுக்கு விவரத்தை இங்கு கொடுத்துவிடுகிறேன்.

 

பொதுவாக வரைபடம் என்று பார்த்தால், இரண்டு விவரங்களை வைத்து வரையப்படும். X ஆக்சிஸ்சில் நாட்களையும், Y ஆக்ஸ்சில் விலை விவரத்தையும் வைத்து வரைவோம் அல்லவா. அவ்வாறு வரையும்போது, பொதுவாக ஒவ்வொரு நாளின் முடிவு விலையையும் எடுத்து நாம் குறியிட்டு, அவற்றை இணைத்து வரைவோம்.

இப்போது, நாம் ஒரு நாளின் முடிவு விலையை மட்டும் எடுத்துக்கொண்டு வரைவதக்கு பதிலாக, ஒரு நாளின் நான்கு விலை விவரங்களை வைத்து வரையும் முறையைதான் நாம், கேன்டில் ஸ்டிக் வரைபடம் என்கிறோம்.

 

நான்கு விலை விவரங்கள் என்ன?

ஒரு கமாடிட்டிக்கு எடுத்துக்காட்டாக தங்கத்தை எடுத்துக்கொண்டால், 10 கிராம் தங்கம் முந்தைய நாள் வியாபாரம் ஆன விலை விவரங்களை எடுக்கலாம். அவை...

 

ஆரம்பவிலை

அதிகபட்சவிலை

குறைந்தபட்சவிலை

முடிவுவிலை.

ஓபன் பிரைஸ்

ஹை பிரைஸ்

லோ பிரைஸ்

குளோசிங் பிரைஸ்

26100

26450

26050

26400

 

மேலே உள்ள விலை விவரத்தில், ஓபன் மற்றும் குளோசிங் விலைகளை வரை படத்தில் குறியிட்டு பின் ஒரு பவுடர் டப்பாவை போன்று வரைந்து இணைக்கிறோம்.

இப்படிதான் கேன்டில் ஸ்டிக் வரைபடம் வரையப்படுகிறது.

 

இந்த கேன்டிலும் இரண்டு வகைப்படும்.

1. ஏறி முடிந்தால், காளைகளுக்கான கேன்டில் என்கிறோம்.

2. இறங்கி முடிந்தால், கரடிகளுக்கான கேன்டில் என்கிறோம்.

3. ஒரு வேளை பெரிய ஏற்றம் இறக்கம் இல்லாமல் முடியும் கேன்டில்களை ஸ்பின்னிங் டாப் என்கிறோம். இந்த வகை கேன்டில்களைதான் நாம் இப்போது உபயோகிக்கப்போகிறோம்.

ஸ்பின்னிங்டாப் உருவஅமைப்பின் செய்தி என்னவென்றால், சந்தையின் தற்போதைய போக்கு, முடிவுக்கு வந்துள்ளதோ என்ற சந்தேகத்தை ஏற்படுத்துகிறது.

அதாவது, சந்தை ஏறுமுகமாக இருக்கும்போது, ஸ்பின்னிங்டாப் தோன்றினால், ஏற்றம் முடிவுக்கு வந்ததோ என்ற சந்தேகத்தை ஏற்படுத்துகிறது. அடுத்த நாள் சந்தை இறங்க ஆரம்பித்தால், சந்தையின் திசை திருப்பம் நிகழ்ந்துள்ளதாக எடுத்துக்கொள்ளலாம்.

 

அதுவே சந்தை இறங்குமுகமாக இருக்கும்போது, இறக்கத்தின் முடிவில் ஸ்பின்னிங் டாப் தோன்றினால், சந்தையின் இறக்கம் முடிவுக்கு வந்து, இனி மேல்நோக்கி திருப்பியதாக எடுத்துக்கொள்ளலாம். ஆனால், இதற்க்கு ஒரு நிரூபணம் வேண்டும். அதாவது, அடுத்த நாள் சந்தையான ஏற ஆரம்பிக்கவேண்டும்.

 

இப்போது நமக்கு இந்த ஸ்பின்னிங்டாப் தோன்றும்போது என்ன அர்த்தம் கொள்ளலாம் என்று விளக்கமாக பார்த்துவிட்டோம். இனி அதை செயல்படுத்தி பார்க்கலாமா? கேன்டில்களை வைத்து டவுன்சுவிங்

 

 

மேலே உள்ள படத்தில் விலை இறங்குமுகமாக உள்ளது. இறக்கம் என்பது கரடிகளுக்கான கேன்டில்களை கொண்டது. எனவே சிவப்பு நிற கேன்டில்கள் தொடர்ந்து தோன்றுகின்றன. இந்த கரடிகளுக்கான கேன்டில்களின் தோன்றலுக்கு முடிவில், ஒரு ஸ்பின்னிங் டாப் தோன்றுகிறது. இந்த வரைபடத்தில் இது பச்சை வண்ணத்தில் உள்ளது. பொதுவாக ஸ்பின்னிங்டாப் என்பது, சிறிய உடலமைப்பின் அடிப்படையில் வகைப்படுத்தப்படுகிறது. எனவே அது பச்சை நிறமாக இருந்தாலும் சரி, சிவப்பு நிறமாக இருந்தாலும் சரி, அதற்கு பலன் ஒன்றுதான். எனவே உள்ள படத்தில் ஸ்பின்னிங் டாப் தோன்றிய பிறகு, விலையானது இறக்கத்தில் இருந்து மீண்டு மேலே ஏற ஆரம்பிக்கிறது.

 

எனவே டவுன்சுவிங் முடிவுக்கு வந்து மேல்நோக்கி விலை திரும்புகிறது. இந்த எடுத்துக்காட்டில் கேன்டில்களை வைத்து எவ்வாறு டவுன்சுவிங் முடிந்து நாம், ஸ்விங் டிரேடிங்குக்காக வாங்கலாம் என்பதை பார்த்தோம்.

இந்த டவுன் சுவிங் என்பது, இன்னொரு அடையாளமாகவும் எடுத்துக்கொள்ளலாம். இதைத்தான், ஸ்விங் லோ என்று சொல்லுகிறோம். கேன்டில்கள் மூலமாக ஸ்விங் லோவை அடையாளம் கண்ட பிறகு, வியாபாரிகள் இந்த வாய்ப்பை பயன்படுத்து வாங்கி விற்பதற்கு தயாராகலாம்.

 

ஒரு ஸ்விங் லோ முடிந்து எப்படி, விலை மேலே ஏற ஆரம்பிக்கிறது என்பதை ஒரு எடுத்துக்காட்டுடன் பார்க்கலாம். தங்கம்.

 

மேலே உள்ள வரைபடத்தில் தங்கின் விலை தொடர்ந்து வீழ்ச்சி அடைவதை பார்க்கிறோம். இதனால், இதன் இறக்கத்தில் அதிக அளவு கரடிகளுக்கான சிவப்பு நிற கேன்டில்களை பார்க்கலாம். இந்த இறக்கத்தின் முடிவில் நீளமான சிவப்பு நிற கேன்டிலுக்கு பிறகு ஒரு சிறிய ஸ்பின்னிங் டாப் கேன்டில், பச்சை வண்ணத்தில் தோன்றி இருப்பதை பார்க்கிறோம். பொதுவாக ஸ்பின்னிங்டாப் வகை கேன்டில்களுக்கு நிறம் முக்கியமில்லை என்று ஏற்கெனவே கூறி இருக்கிறேன். இந்த தங்கம் வரைபடத்தின் எடுத்துக்காட்டில், இறக்கத்தின் முடிவில் ஒரு பச்சை வண்ண ஸ்பின்னிங் டாப் தோன்றியதோடு மட்டுமல்லாமல், அடுத்த நாள் ஒரு பலமான காளைகளுக்கான கேன்டில் தோன்றி இருப்பதை பார்க்கிறோம். இதுவே விலையான இறக்கத்தில் இருந்து மேல் நோக்கி திரும்பி ஏற ஆரம்பிப்பதை காட்டுகிறது.

 

அடுத்த சூழ்நிலையை பார்ப்போமா?

மேலே உள்ள படத்தில் ஒரு பொருளின் விலை ஏற்றத்தில் உள்ளது. இதனால், தொடர்ந்து காளைகளுக்கான கேன்டில்கள் தோன்றுவதை பார்க்கிறோம். விலை ஏற்றத்தின் முடிவில் ஒரு ஸ்பின்னிங் டாப் தோன்றுகிறது.

இப்போது நாம் பார்ப்பது, கேன்டில்களை வைத்து ஒரு அப்சுவிங் எப்படி முடிவுக்குவந்து, பின்பு ஒரு ஸ்விங்டிரேடிங் முறையில் ஷாட் அடிப்பதை பார்க்கிறோம்.

ஓகே. விலை ஏற்றமுடிவில் ஸ்பின்னிங்டாப் வந்துள்ளது என்று பார்த்தோம். எனவே இனி விலையானது, கீழ்நோக்கி இறங்க வாய்ப்புள்ளது என்பதற்கான அடையாளமே இது. ஆனாலும், இது இறங்கும் என்று நிச்சயமாக சொல்லமுடியாது. அதோடு, இந்த திசை திரும்புதல், தொடர வேண்டுமானல், அடுத்தநாள் அதற்கான நிரூபணம் வேண்டும். நிரூபணம் என்றால், அடுத்தநாள் விலையானது இறங்க வேண்டும். அதற்கு அறிகுறியாக ஒரு கரடிகளுக்கான கேன்டில் வரவேண்டும். இதுதான் கேன்டில் கள் மூலமாக அப்சுவிங்கை அடையாளம் காணும் முறை.

 

 

இந்த திசை திரும்புதலைதான் ஸ்விங் ஹய் என்று சொல்லுவோம். இந்த ஸ்விங் ஹய் என்பதை அடையாளம் கண்ட பிறகு, வியாபாரிகள் ஷாட் அடிப்பதற்க்கு தயாராகலாம்.

 

இதற்கு ஒரு எடுத்துக்காட்டுடன் பார்க்கலாம்.

 

 

 

 

 

 

 

 

 

மேலே உள்ள வரைபடத்தில், தங்கம் விலை ஏற்றத்துடன் காணப்படும்போது, பச்சை நிற கேன்டில்கள் உருவாகி உள்ளதை பார்க்கிறோம். இந்த தொடர் ஏற்றத்திற்குபின், ஒரு சிறிய சிவப்பு நிற ஸ்பின்னிங் டாப் உருவாகி இருப்பதை பார்க்கிறோம். இந்த ஸ்பின்னிடாப் உருவான மொத்த அமைப்பைதான், ஸ்வின் ஹய் என்று அழைக்கிறோம். அதன் பின் அதுவே டவுன் சுவிங்காக மாறுவதை படத்தில் பார்க்கிறோம். டவுன் சுவிங் வந்தபிறகு விலையானது,, பெரும் வீழ்ச்சி அடைந்ததையும் பார்க்கிறோம்.

 

இதுவரை நாம் கேன்டில்களை பயன்படுத்தி எப்படி ஒரு சுவிங் லோவை கண்டுபிடிப்பது. பின் அது அப்சுவிங்காக மாறும்போது, அதை நாம் சுவிங் டிரேடுக்காக வாங்குவதற்க்கு உபயோகப்படுத்துவது என்றும் பார்த்தோம். அதேபோல், கேன்டில்களை வைத்து எப்படி சுவிங் ஹய் என்பதை அடையாளம் காண்பதும், அதன் பின் வரக்கூடிய டவுன்சுவிங்கை வைத்து ஷாட் அடிப்தையும் தெளிவாக பார்த்தோம்.

 

இனி அடுத்த வாரம் ஸ்டாப் லாஸ் என்பது நல்லதா? கெட்டதா? ஏன் ஸ்டாப்லாஸ் அடிக்கிறது என்பதையும் பார்க்கலாம்.

 

 

விகடன் இதழ்கள் மற்றும் இ-புத்தகங்களை உங்கள் மொபைலில் படிக்க புதிய Vikatan APP

MUST READ