Vikatan.com

www.vikatan.com would like to send you push notifications.

Notifications can be turned off anytime from browser settings.

மேற்கிந்திய தீவுகள் அணிக்கு 250 கோடி அபராதம் விதித்தது பிசிசிஐ!

 மேற்கிந்திய தீவுகள் அணிக்கு 250 கோடி அபராதம் விதித்தது பிசிசிஐ!

 
இந்தியாவிற்கு ஐந்து ஒருநாள், ஒரு டி20, மற்றும் 3 டெஸ்ட் போட்டிகளில் ஆட சம்மதித்து இந்தியாவில் பயணம் மேற்கொண்ட மேற்கிந்திய தீவுகள் கிரிக்கெட் அணி தொடரின் பாதியிலேயே அந்த நாட்டுடனான ஊதிய பிரச்னை காரணமாக தொடரில் இருந்து விலகியது.
 
இதனால் இனி இரு நாடுகளிக்கு இடையே தனி தொடரை நடத்தப்போவதில்லை என்ற முடிவை இந்திய கிரிக்கெட் வாரியம் எடுத்த நிலையில். தற்போது இந்த தொடரிலிருந்து விலகியதால் ஏற்பட்டுள்ள நஷ்டத்தை ஈடுகட்ட சொல்லி மேற்கிந்திய தீவுகள் கிரிக்கெட் வாரியத்துக்கு நோட்டீஸ் அனுப்பியுள்ளது.
 
இந்த தொடரில் இருந்து விலகியதால் 17 நாட்கள் இந்தியாவில் புக் செய்யப்பட்ட மைதானங்களுக்கு இழப்பு ஏற்பட்டுள்ளது. இந்திய கிரிக்கெட் வாரியத்தின் போட்டி ஒளிபரப்பு உரிமம் சுமார் 216 கோடி, டைட்டில் மற்றும் அணிக்கான ஸ்பான்ஸர்ஷிப் சுமார் 20 கோடி,டிக்கெட் மற்றும் மைதான விளம்பரங்கள் 20 கோடி மற்றும் விளையாட்டு உபகரணங்களுக்கான ஸ்பான்ஸர்ஷிப் 3.5 கோடி என இந்திய கிரிக்கெட் வாரியத்துக்கு 250 கோடி இழப்பு ஏற்பட்டுள்ளது.இந்த இழப்பீடை திரும்ப தருமாறு இந்திய கிரிக்கெட் வாரியம் மேற்கிந்திய தீவுகள் வாரியத்துக்கு நோட்டீஸ் அனுப்பியுள்ளது.
 
இந்த இழப்பை சமாளிக்க இந்திய அணி தற்போது இலங்கையுடன் 5 ஒருநாள் போட்டி கொண்ட தொடரில் விளையாடி வருவது குறிப்பிடத்தக்கது.
விகடன் இதழ்கள் மற்றும் இ-புத்தகங்களை உங்கள் மொபைலில் படிக்க புதிய Vikatan APP

MUST READ