Vikatan.com

www.vikatan.com would like to send you push notifications.

Notifications can be turned off anytime from browser settings.

புதிய உச்சத்தை தொட்ட சந்தை சற்று சரிவு!

 28000 புள்ளிகளை நோக்கி சென்செக்ஸ்!

 

காலை 11.30 மணி நிலவரம்
 
 ஏற்றத்தில் துவங்கிய இந்தியா பங்குச் சந்தைகள் தற்போது சற்று சரிய ஆரம்பித்துள்ளது.அதாவது மும்பை பங்குச்சந்தையின் குறியீடான சென்செக்ஸ் 35 குறைந்து  27834 என்ற நிலையிலும், தேசிய பங்குச் சந்தையான நிஃப்டியின் குறியீடு 8 புள்ளிகள் சரிந்து 8312 என்ற நிலையில் வர்த்தகமாகி வருகிறது. சந்தை இன்று புதிய உச்சத்தை தொட்டாலும், தற்போது 8300 என்ற நிலையில் நிஃப்டி வர்த்தகமாகி வருகிறது.
 
 
 மெட்டில் மற்றும் ஐடி துறை பங்குகளின் விலை அதிகரித்துள்ளது. இதில் ஜிண்டால் ஸ்டீல்(2.6%), பிஎன்பி(2.2%), டெக் மஹிந்திரா(1.64%) பங்குகளின் விலை அதிகரித்து உள்ளது
.கெயில் இந்தியா பங்கின் விலை 4 சதவிகிதத்துக்கு மேல் சரிந்துள்ளது. மேலும் மஹிந்திரா அண்டு மஹிந்திரா(3.22%), ஹீரோ மோட்ட கார்ப்(1.77%), பிஹெச்இஎல்(1.60%) பங்குகளின் விலையும் குறைந்து வர்த்தமாகி வருகிறது.
 
 
 
 
 
காலை 9:20 மணி நிலவரம்:
 
இன்று காலை 9.20 மணி நிலவரப்படி இந்திய சந்தைகள் ஏற்றத்தில் துவங்கியுள்ளன. இந்திய சந்தையான சென்செக்ஸ் இன்றைய நாளின் துவக்கத்தில் 77 புள்ளிகள் அதிகரித்து புதிய உச்சமான 27,943 புள்ளிகளை தொட்டு வர்த்தகமானது. இன்று மும்பை பங்குச்சந்தை 28000 புள்ளிகள் எனும் இலக்கை தொடும் என்று எதிர்பார்க்கப்படுகிறது. தேசிய பங்குச்சந்தையான நிஃப்டி 17.8 புள்ளிகள் அதிகரித்து 8340 என்ற அளவில் வர்த்தகமானது.
 
அமெரிக்க டாலரின் பதிப்பு கடந்த 7 வருடங்களில் இல்லாத அளவிற்கு உயர்ந்ததும், வெள்ளிக்கிழமை வெளியான ஜப்பானின் புதிய கொள்கை அறிவிப்புகளும் இந்த ஏற்றத்திற்கு காரணமாகியுள்ளன. அதுமட்டுமின்றி ஐரோப்பியாவில் பொருளாதார சீர்திருத்தங்கள் ஏற்பட்டு வருவதும் ஏற்றத்துக்கு காரணமாகியுள்ளன.
 
அமெரிக்க டாலருக்கு நிகரான இந்திய ரூபாயின் மதிப்பு 61.49 ரூபாயாகவும், 10 கிராம் தங்கத்தின் விலை 26,135 ரூபாயாகவும் வர்த்தகமாகி வருகிறது. குறிப்பாக டாக்டர் ரெட்டி, ஹிண்டால்கோ,ஜின்டால் ஸ்டீல், இன்ஃபோசிஸ் நிறுவன பங்குகள் விலை அதிகரித்தும், டிஎல்எஃப், எம்&எம் நிறுவன பங்குகள் விலை குறைந்தும் வர்த்த்கமாகின.

 

விகடன் இதழ்கள் மற்றும் இ-புத்தகங்களை உங்கள் மொபைலில் படிக்க புதிய Vikatan APP

MUST READ