Vikatan.com

www.vikatan.com would like to send you push notifications.

Notifications can be turned off anytime from browser settings.

8 % குறைந்தது ஹீரோ மோட்டோ கார்ப் விற்பனை!

 8 % குறைந்தது ஹீரோ மோட்டோ கார்ப் விற்பனை!

 
இந்தியாவின் இரண்டாவது மிகப்பெரிய இருசக்கர வாகன த்யாரிப்பாளரான ஹீரோ மோட்டோ கார்ப் சென்ற ஆண்டைவிட இந்த ஆண்டு 8% விற்பனை சரிவை சந்தித்துள்ளது. சென்ற அக்டோபர் 2013ம் ஆண்டு 6,25,420 இரு சக்கர வாகனங்களை விற்பனை செய்துள்ள ஹீரோ மோட்டோ கார்ப். தற்போது இந்த அக்டோபரில் 5,75,056 வாகனங்களை விற்பனை செய்துள்ளது.
 
சென்ற ஆண்டைவிட 8 % விற்பனை குறைவாக பதிவு செய்துள்ள ஹீரோ மோட்டோ கார்ப் உலகம் முழுவது 5000 கோடி ரூபாய் அளவிலான முதலீடை செய்துள்ளது.கொலம்பியா மற்றும் பங்களாதேஷில் தயாரிப்பு நிறுவனங்களை கொண்டுள்ள இந்நிறுவனம் குஜராத் மற்றும் ஆந்திராவில் தயாரிப்பு நிறுவனங்களையும், ராஜஸ்தானில் சர்வதேச ஆராய்ச்சி நிறுவனத்தையும் அமைக்க திட்டமிட்டுள்ளது.
 
பண்டிகை தின விற்பனை குறைவே இந்த விற்பனை சரிவுக்கு காரணமாக கூறப்படுகிறது.
 
விகடன் இதழ்கள் மற்றும் இ-புத்தகங்களை உங்கள் மொபைலில் படிக்க புதிய Vikatan APP