Vikatan.com

www.vikatan.com would like to send you push notifications.

Notifications can be turned off anytime from browser settings.

விமான எரிபொருள் விலை 7.3% சரிவு!


கச்சா எண்ணெய் விலை குறைந்ததைத்தொடர்ந்து பெட்ரோல் டீசல் விலை மட்டுமல்ல விமான எரிபொருள் விலையும் வீழ்ச்சி அடைந்துள்ளது. ஆகஸ்ட் மாதத்திலிருந்து நான்கு முறை ஜெட் விமான எரிபொருள் விலை குறைக்கப்பட்டுள்ளது.

டெல்லியில் தற்போதைய விலை நிலவரப்படி ஒரு கிலோ லிட்டர்  எரிபொருள் 62,537.93 ரூபாயில் விற்பனை செய்யப்படுகிறது. இது இதற்கு முந்தைய மாதத்தை விட 7.3% குறைவு.

அக்டோபர் மாத தொடக்கத்திலும் மூன்று சதவிகிதம் விலைக்குறைப்பு நடவடிக்கை எடுக்கப்பட்டது குறிப்பிடத்தக்கது. ஒரு விமான நிறுவனத்தின் ஒட்டு மொத்த செலவுகளில் எரிபொருள் செலவு 40% பங்கு கொண்டுள்ளது குறிப்பிடத்தக்கது.

எனவே இந்த விலை குறைப்பு நடவடிக்கை விமான நிறுவனங்களின் நிதிச்சுமையை குறைக்கும் என்பதில் சந்தேகமில்லை. இருந்த போதிலும் பயணிகளின் கட்டணத் தொகையில் இதுவரையிலும் எவ்வித மாற்றங்களும் கொண்டு வரப்படவில்லை.
மேலும் மானியமில்லா சமையல் எரிவாயு சிலிண்டர்களின் விலையும் ஒவ்வொரு மாதத்தின் தொடக்கத்திலும் குறைக்கப்பட்டு வருகிறது.

இன்றைய நிலவரப்படி 14.2 கிலோ மானியமில்லா சிலண்டரின் விலை 865 ரூபாய் (டெல்லி). இதுவே ஜூலை மாதத்தின் தொடக்கத்தில் 922.50 ரூபாய்க்கு விற்பனை செய்ய்ப்பட்டு வந்தது.
 

விகடன் இதழ்கள் மற்றும் இ-புத்தகங்களை உங்கள் மொபைலில் படிக்க புதிய Vikatan APP

MUST READ