Vikatan.com

www.vikatan.com would like to send you push notifications.

Notifications can be turned off anytime from browser settings.

[X] Close

பேங்க் ஆஃப் பரோடா: நிகர லாபம் 26%அதிகரிப்பு

பேங்க் ஆஃப் பரோடாவின் செப்டம்பர் மாத காலாண்டு முடிவு வெளியாகி உள்ளது. இந்த காலாண்டில் வங்கின்  நிகர லாபம் 26.41% 786 கோடி ரூபாயாக உள்ளது. இதே 2013-14ம் நிதியாண்டில் ஜூலை-செப்டம்பர் காலாண்டு நிகர லாபம் 621.77 கோடி ரூபாயாக இருந்தது. 
 
வங்கியின் வட்டி வருமானம் 20சதவிகிதம் அதிகரித்து 11,093 கோடி ரூபாயாக உள்ளது. இது கடந்த ஆண்டில் 9,239 கோடி ரூபாயாக இருந்தது. 
 
மொத்த வாராக் கடன் 3.54 சதவிகிதத்திலிருந்து 2.93 சதவிகிதமாக குறைந்துள்ளது. நிகர வாராக் கடன் 2.32 சதவிகிதமாக உள்ளது. 
 
மேலும் வங்கியின் மொத்த வருமானம்  செப்டம்பர் மாதத்தில் 12,099 கோடி ரூபாயாகவும், கடந்த ஆண்டு இதே காலாண்டில் 10,339 கோடி ரூபாயாக இருந்தது. இந்த பங்கின் விலை இன்று சுமார் 2 சதவிகிதத்துக்கு மேல் அதிகரித்து 949.75 வர்த்தமாகி வருகிறது. 

 

உங்கள் கருத்தைப் பதிவு செய்யுங்கள்

விகடன் இதழ்கள் மற்றும் இ-புத்தகங்களை உங்கள் மொபைலில் படிக்க புதிய Vikatan APP
Advertisement
Advertisement

MUST READ

Advertisement
Advertisement
[X] Close