Vikatan.com

www.vikatan.com would like to send you push notifications.

Notifications can be turned off anytime from browser settings.

[X] Close

என்ஹெச்பிசி: புதிய 3,000 மெகாவாட் மின் சார உற்பத்தி ஆலை

 

இந்தியாவின் மிகப்பெரிய நீர் மின்சார உற்பத்தி ஆலையை அமைக்க உள்ளது என்ஹெச்பிசி. 
 
3,000 மெகாவாட் திறன் கொண்ட இந்த மின் நிலையம் 
அருணாச்சல பிரதேசத்தில் அமைய உள்ளது.  மாநில அரசின் ஒத்துழைப்போடு தொடங்கப்பட உள்ள இந்த திட்டத்துக்கு திபாங் வனத்துறை ஆலோசனைக் குழு அனுமதி கொடுத்து விட்டது.  இதனைத் தொடர்ந்து மத்திய வனத்துறை அமைச்சகத்தின் அனுமதியை இந்த வருடத்திற்குள்  பெறுவதற்கான ஏற்பாடுகளை செய்து வருகிறது.
 
இந்த திட்டதுக்கான மொத்த மதிப்பீடு சுமார் 15 முதல் 16 ஆயிரம் கோடி ரூபாயக் தீர்மானிக்கப்பட்டுள்ளது. மாநில அரசாங்கத்தின் கூட்டு முதலீடாக இது இருக்கும். இந்த திட்டதின் மூலம், மின் உற்பத்திக்கு ஆகும் செலவு ஒரு மெகா வாட் உற்பத்திக்கு சராசரியாக 7 முதல் 8 கோடி ரூபாய்க்குள் இருக்கும் என என்ஹெச்பிசி தெரிவித்துள்ளது.
 
புதிய திட்டங்களை தொடங்குவதற்கான அனுமதிகளை நரேந்திர மோடி தலைமையிலான மத்திய அரசாங்கம் விரைந்து கொடுத்து வரும் நிலையில், இந்த திட்டத்துக்கான அனுமதி கிடைத்து விடும் என நம்புவதாக என்ஹெச்பிசி தலைவர் ஆர்எஸ்டி சாய் தெரிவித்துள்ளார். 
 
தனியார் மின் உற்பத்தி நிறுவனங்களுக்கு ஈடுகொடுக்கும் விதமாக என்ஹெச்பிசியின் விரிவாக்கம் உள்ளது என்று தெரிவித்தவர். இது கிட்டதட்ட மொத்த உற்பத்தி திறனில் 50 சதவிகிதமாக இருக்கும் எனவும் தெரிவித்துள்ளார். 
 
என்ஹெச்பிசியின் தற்போதைய உற்பத்தி திறன் 6,500 மெகா வாட் என்கிற நிலையில் இந்த விரிவாக்கம் பொருளாதார முன்னேற்றதுக்கு உறுதுணையாக இருக்கும் என நம்பலாம். 
 

உங்கள் கருத்தைப் பதிவு செய்யுங்கள்

விகடன் இதழ்கள் மற்றும் இ-புத்தகங்களை உங்கள் மொபைலில் படிக்க புதிய Vikatan APP
Advertisement
Advertisement

MUST READ

Advertisement
Advertisement
[X] Close