Vikatan.com

www.vikatan.com would like to send you push notifications.

Notifications can be turned off anytime from browser settings.

கோல் இந்தியா அக்டோபர் மாத உற்பத்தி அதிகரிப்பு!

 கோல் இந்தியா நிறுவனத்தின் அக்டோபர் மாத உற்பத்தி 40.2 மில்லியன் டன் உற்பத்தி செய்துள்ளது. இதனுடைய உற்பத்தி  இலக்கு 39.74 டன். இலக்கை விட அதிகமாக உற்பத்தி செய்துள்ளது. குறிப்பிடதக்கது, 

மேலும் நடப்பு நிதியாண்டில் முதல் ஏழு மாதங்கள் தன்னுடைய இலக்கை அடையவில்லை. அதாவது 259.85 மெட்ரிக் டன்னாக இருந்த இலக்கில் 250.96 மெட்ரிக் டன்னை மட்டும்தான் உற்பத்தி செய்ய முடிந்தது. 
 
கோல் இந்தியா நிறுவனம் தனது இலக்கை எட்ட அடைய முடியாததற்கு மிகமுக்கிய காரணமாக இருந்தது சுற்றுபுற சுழல் அனுமதி வாங்குவதில் ஏற்பட்ட காலதாமதம் ஒரு காரணமாக கருதப்படுகிறது. 
2013-14ம் ஆண்டில்  உள்நாட்டு உற்பத்தியில் 80 சதவிகிதம் மட்டும்தான் நிறைவு செய்ய முடிந்தது. அதாவது 482 மில்லியன் டன் இலக்கில் 462 டன் தான் உற்பத்தி செய்ய முடிந்தது. மேலும் 2012-13ம் ஆண்டில் கோல் இந்தியா நிறுவனம் 452.5 மெட்ரிக் டன் உற்பத்தி செய்தது. 
விகடன் இதழ்கள் மற்றும் இ-புத்தகங்களை உங்கள் மொபைலில் படிக்க புதிய Vikatan APP

MUST READ