Vikatan.com

www.vikatan.com would like to send you push notifications.

Notifications can be turned off anytime from browser settings.

போஸ்ட்-பேய்டு கட்டணத்தை 12% உயர்த்தியது ஏர்டெல்

 போஸ்ட்-பேய்டு கட்டணத்தை 12% உயர்த்தியது ஏர்டெல்

 
ஏர்டெல் தனது போஸ்ட் பேய்டு சேவையில் குறிப்பிட்ட சில சேவை திட்டங்களுக்கு அதன் மாதாந்திர கட்டணத்தில் 12 சதவிகிதத்தை உயர்த்தியுள்ளதாக ஏர்டெல் நிர்வாகம் அறிவித்துள்ளது. இது வரும் டிசம்பர் மாதம் முதல் அமலுக்கு வரும் என ஏர்டெல் தெரிவித்துள்ளது.
 
வரும் டிசம்பர் முயுன்றாம் தேதி அமலுக்கு வரும் இந்த விலை ஏற்றத்தில் 199 ரூபாய் மாத கட்டணம் உள்ள திட்டம் இனி 244 ரூபாயாக அதிகரிக்கும் என்று கூறப்பட்டுள்ளது.அது தவிர அனைத்து குறைந்த விலை திட்டங்களுக்கும் இந்த விலையேற்றம் பொருந்தும் என்றும் கூறப்பட்டுள்ளது. இது கடந்த மூன்று மாதத்தில் ஏர்டெல் செய்துள்ள இரண்டாவது விலையேற்றம் என்பதும் குறிப்பிடத்தக்கது.
 
20 கோடி வாடிக்கையாளர்களை கொண்டுள்ள ஏர்டெல் நிறுவனம் சென்ற செப்டம்பர் மாதம் இன்டர்நெட் சேவைகளில் 33 சதவிகித கட்டனத்தை உயர்த்தி இருந்தது குறிப்பிடத்தக்கது. 2ஜி ஸ்பெக்ட்ரம் ஒதுக்கீட்டில் ஏற்பட்ட இழப்பை சரிசெய்யும் நோக்கில் இந்த விலை உயர்வு செய்யபட்டிருக்கலாம் என்று கூறப்படுகிறது.
விகடன் இதழ்கள் மற்றும் இ-புத்தகங்களை உங்கள் மொபைலில் படிக்க புதிய Vikatan APP

MUST READ