Vikatan.com

www.vikatan.com would like to send you push notifications.

Notifications can be turned off anytime from browser settings.

முருகப்பா குழுமம் : திருத்தணியில் புதிய தொழிற்சாலை !

முருகப்பா குழுமத்தின் அங்கமாக விளங்கும் டியூப் இன்வெஸ்ட்மென்ட் ஆப் இந்தியா (TubeInvestments of India) நிறுவனம், திருத்தணியில் பெரிய சுற்றளவுள்ள குழாய்கள் (Large Diameter Tubes) தயாரிக்கும் தொழிற்சாலையினை சமீபத்தில் தொடங்கியது. இதை முருகப்பா குழுமத்தின் தலைவர் ஏ.வெள்ளையன் திறந்து வைத்தார். 250 கோடி ரூபாய் முதலீட்டில் தொடங்கப்பட்டுள்ள இந்தத் தொழிற்சாலை Hydraulic Cylinders, Propeller Shafts மற்றும் Infrastructure ஆகிய துறைகளில் உபயோகப் படுத்தப்படும் விதமாக  ஒவ்வொரு மாதமும், 11,000 டன் குழாய்களை தயாரிக்கும் திறன் கொண்டதாக விளங்கும். 
 
இதுவரை இறக்குமதி மூலமாகவே இத்தகையகுழாய்கள் இந்தியாவில் இறக்குமதி செய்யப்பட்டு வந்தது குறிப்பிடத்தக்க விஷயம். ஆனால் இனி இந்த தொழிற்சாலையின் மூலம் முழுக்க முழுக்க இந்தியாவிலேயே தயாரிக்கப்படும் என்பது சிறப்பான விஷயம். 

தமிழக அரசின் ஒற்றை சாரள திட்டத்தின்கீழ் அமைக்கப்பட்டுள்ள இந்த தொழிற்சாலை உலகத்தரத்தில் செயல்படுமாறு அமைக்கப்பட்டுள்ளது. 63 ஏக்கர் பரப்பளவில் அமைந்துள்ள இந்தத் தொழிற்சாலையில் 6 செ.மீ. முதல் 18 செ.மீ.  வரை விட்டம் அளவுள்ள குழாய்கள் தயாரிக்கப்பட உள்ளன.  இந்த நிறுவனத்தின் ஆவடி தொழிற்சாலையில் இதை விட சிறிய அளவிலான குழாய்கள் ஏற்கெனவே தயாரிக்கப்பட்டு வருகின்றன. 
விகடன் இதழ்கள் மற்றும் இ-புத்தகங்களை உங்கள் மொபைலில் படிக்க புதிய Vikatan APP

MUST READ