Vikatan.com

www.vikatan.com would like to send you push notifications.

Notifications can be turned off anytime from browser settings.

நிதி சேவைகள் செயலாளர் ஆகிறார் ஹஸ்முக் அத்ஹியா!

 நிதி சேவைகள் செயலாளர் ஆகிறார் ஹஸ்முக் அத்ஹியா!

 
இந்தியாவின் புதிய நிதி சேவைகள் செயலாளராக ஹஸ்முக் அத்ஹியா நியமிக்கப்பட்டுள்ளார். ஏற்கெனவே இந்த பதவியில் இருந்த ஜி.எஸ்.சந்து இந்த பதவியிலிருந்து தேசிய கெமிக்கல் ஆயுத துறைக்கான சேர்மனாக நியமிக்கப்பட்டுள்ளார். இவர் கடந்த மாதத்தில் அரவிந்த மயுராமுக்கு அடுத்தபடியாக நிதி சேவைகள் பிரிவிலிருந்து மாற்றப்பட்டிருக்கிறார். 
 
கடந்த 15 நாட்களில் அரவிந்த் மயுராம் 2 முறை முக்கிய பிரிவுகளான வெளியுறவு மற்றும் நிதி துறைகளில் இருந்து மாற்றப்பட்டு இப்போது குறைந்த முக்கியத்துவம் வாய்ந்த பிரிவுகளை கவனிப்பது குறிப்பிடத்தக்கது.
 
ஹஸ்முக் அத்ஹியா 1981ம் ஆண்டு ஐஏஎஸ் பயிற்சி குழுவில் இடம்பெற்றவர் என்பது குறிப்பிடத்தக்கது.தற்போது குஜராத்தில் நிர்வாக அதிகாரியாக பதவி வகிக்கும் இவர் நிதி சேவைகள் பிரிவு செயலாளராக நியமிக்கப்பட்டுள்ளார்.
 
இந்த மாற்றங்களுக்கு பிறகு 2014-15ம் ஆண்டு பட்ஜெட் தயாரிப்பில் ராஜிவ் மெஹ்ரிஷி தலைமையிலான செயலாளர் குழு புதிய தலைமை பொருளாதார ஆலோசகர் அரவிந்த் சுப்ரமணியத்துடன் இணைந்து பட்ஜெட் தயாரிக்கும் செயல்களை செய்வார்கள் என நிதியமைச்சகம் குறிப்பிட்டுள்ளது.
 
விகடன் இதழ்கள் மற்றும் இ-புத்தகங்களை உங்கள் மொபைலில் படிக்க புதிய Vikatan APP

MUST READ