Vikatan.com

www.vikatan.com would like to send you push notifications.

Notifications can be turned off anytime from browser settings.

இந்திய அணியின் கிரிக்கெட் ஸ்கோர் சொல்ல வருகிறது புதிய டேப்லெட் முறை: பிசிசிஐ

 இந்திய அணியின் கிரிக்கெட் ஸ்கோர் சொல்ல வருகிறது புதிய டேப்லெட் முறை: பிசிசிஐ

 
சில மாதங்களுக்கு முன்பு டிஜிட்டல் மயமாகும் நோக்கத்தில் இந்திய கிரிக்கெட் வாரியம் கிரிக்கெட் போட்டிகளின் போது அணியின் ரன்களையும், வீரர்களது ரன் மற்றும் பந்துவீச்சு தகவல்களை பதிவு செய்ய டேப்லெட்டை ஸ்கோரர்களுக்கு வழங்கியது. தற்போது இந்த டிஜிட்டல் செயல் முறையை நடைமுறைப்படுத்தியுள்ளது பிசிசிஐ.
 
இதன் மூலம் இந்திய கிரிக்கெட் அணி தொடங்கி உள்ளூர் அணிகள் வரை ஆண்டுக்கு 2000 போட்டிகளுக்கான ஸ்கோர் விவரங்களை பிசிசிஐ தனது இணைய தலத்தில் வழங்கி வருகிறது. இனி இந்த ஸ்கோர் விவரங்கள் டேப்லெட் வசதியுடம் உடனுக்குடன் அப்டேட் செய்யப்பட்டு பயன்பாட்டாளர்களுக்கு வழங்கப்படும் என்று பிசிசிஐ அறிவித்துள்ளது.
 
இதன் மூலம் சில உள்ளூர் ஆட்டங்கள் உட்பட அனைத்து ஆட்டங்களின் வீடியோ பதிவையும் காணலாம். அது மட்டுமின்றி கிராஃபிக்கல் வேகன் வீல் தொழில்நுட்பம், ஒவ்வொரு பந்துக்குமான வர்ணனை என அனைத்து வசதிகளையும் இதில் பெறலாம் என கூறியுள்ளது.
 
இந்த தொழில்நுட்பத்தின் மூலம் கிரிக்கெட் ரசிகர்கள் இனி தமிழ்நாடு ரஞ்சி ஆட்டத்தையும் கூட சர்வதேச போட்டி தரத்தில் காணலாம் என்கிறது பிசிசிஐ.
 
விகடன் இதழ்கள் மற்றும் இ-புத்தகங்களை உங்கள் மொபைலில் படிக்க புதிய Vikatan APP

MUST READ