Vikatan.com

www.vikatan.com would like to send you push notifications.

Notifications can be turned off anytime from browser settings.

உலக பொருளாதார மன்ற மாநாடு

 

உலக பொருளாதார மன்றத்தின் மாநாடு நாளை டெல்லியில் நடக்கிறது. உலகம் முழுவதிலிருந்தும் சுமார் 400 முதலீட்டாளர்கள் இந்த கூட்டத்தில் கலந்து கொள்கின்றனர். மத்திய நிதி அமைச்சர் அருண் ஜேட்லி இந்த மாநாட்டை தொடங்கி வைக்கிறார். கடந்த சில ஆண்டுகளில் இவ்வளவு பெரிய முதலீட்டாளர்கள் கூட்டம் நடப்பது நாட்டின் முக்கியத்துவம் வாய்ந்த நிகழ்வாக தொழில்துறையினர் கருதுகின்றனர்.  
 
உலக பொருளாதார மன்றமும், இந்திய தொழில் கூட்டமைப்பும் இணைந்து இந்த மாநட்டை நடத்துகின்றன. புதிய தொழில் வாய்ப்புகளை கண்டறியவும், வாய்ப்புகளை பயன்படுத்திக்கொள்ள சாதகமான எண்ணத்தையும் இந்த கூட்டம்
 
உருவாக்கும் என நம்புவதாக சிஐஐ தலைவர் சந்திரஜித் பானர்ஜி தெரிவித்துள்ளார். 
 
கப்பல் மற்றும் சாலை போக்குவரத்து துறை அமைச்சர் நிதின் கட்காரி, சட்டம் மற்றும் தொலை தொடர்பு துறை அமைச்சர் ரவி சங்கர் பிரசாத், சுரங்கம், மின்சாரம் மற்றும் மாற்று எரிசத்தி துறை அமைச்சர் பிரியுஷ் கோயல், வணிகம் மற்றும் தொழில்துறை அமைச்சர் நிர்மலா சீத்தாராமன், சமூக நலத்துறை அமைச்சர் ஸ்மிருதி ராணி உள்ளிட்ட அமைச்சர்கள் பலரும் கலந்து கொள்கின்றனர். 
 
பொதுமக்கள் மற்றும் தனியார் நிறுவனங்கள் கூட்டு முதலீடுகள் குறித்து புதிய பார்வையை இந்த கூட்டம் ஏற்படுத்தும் என்றும் தொழில் முனைவுகளில் புதிய பாய்ச்சலை ஏற்படுத்தும் என்கின்றனர் நிகழ்ச்சி ஏற்பாட்டாளர்கள். 45 நாடுகளைச் சேர்ந்த 700க்கும் மேற்பட்ட தொழில்துறையினர் கலந்து கொள்ளும் இந்த மாநாட்டிற்கு பிரதமர் மோடிக்கும் அழைப்பு விடுக்கப்பட்டிருக்கிறது.
 
டிஜிட்டல் இந்தியா, மேக் இன் இந்தியா, என முதலீட்டாளர்களை ஊக்கப்படுத்தி வரும் இந்த நேரத்தில் நடைபெறும் மாநாடு இந்திய பொருளாதரத்துக்கு மேலும் வலு சேர்க்கும் என்று நம்பலாம்.
 
விகடன் இதழ்கள் மற்றும் இ-புத்தகங்களை உங்கள் மொபைலில் படிக்க புதிய Vikatan APP

MUST READ