Vikatan.com

www.vikatan.com would like to send you push notifications.

Notifications can be turned off anytime from browser settings.

ஐடி தொழில்நுட்ப சேவை: நிதி நிறுவனங்கள் ரூ.469 பில்லியன் செலவு!

இந்திய வங்கிகள் மற்றும் செக்யூரிட்டீஸ் நிறுவனங்கள் 2014ம் ஆண்டில் ஐடி சார்ந்த தொழில்நுட்பத்தை  மேம்படுத்த மற்றும் சேவை வழங்குவதற்காக 469 பில்லியன் ரூபாய் செலவு செய்ய உள்ளன. இது கடந்த  வருடத்தை விட 10 சதவிகிதம் அதிகமாகும். அதாவது 2013ம் ஆண்டில் இந்த சேவையை வழங்குவதற்காக 427 பில்லியன் ரூபாயை செலவு செய்யப்பட்டிருக்கிறது. 
 
நிதி நிறுவனங்கள் தங்களின் தினசரி வேலைகளை செய்வதற்கான அலுவலக  ஐடி தொழில் நுட்பம், ஹார்டுவேர், சாஃப்ட்வேர் ஐடி சேவை மற்றும் டெலி கம்யூனிக்கேஷன்களுக்காக இந்த செலவு மேற்கொள்ளப்பட உள்ளது. 
 
ஐடி தொழில்நுட்பம் சார்ந்த சேவையை வழங்குவதற்காக 155 பில்லியன் ரூபாய் இந்த துறையில் செலவழிக்கப்பட உள்ளது. இது மொத்த செலவில் இது  33 சதவிகிதமாகும்.  சாப்ஃட்வேர் மூலமாக அதிக வளர்ச்சி அடைவதற்காக இந்த நடவடிக்கை மேற்கொள்ளப்பட்டுள்ளது.  இது 2014ம் ஆண்டில் சாஃப்ட் வேர் வளர்ச்சி 16.7% ஆக இருக்கும்.
 
இது வரும்  ஆண்டுகளில் இன்னும் அதிகரிக்க வாய்ப்புள்ளது.  அதாவது ஆர்பிஐ புதிய வங்கிகளுக்கு லைசன்ஸ் வழங்கினால் இந்தத் தொகை அதிகமாகும் என எதிர்பார்க்கப்படுகிறது. 
இந்த தொழில்நுட்பத்தின் மூலமாக வங்கியின் தினசரி வேலைகள் மற்றும் மொபைல் சேவை, ஏடிஎம் சேவை வழங்குவதற்கு உதவியாக உள்ளது
விகடன் இதழ்கள் மற்றும் இ-புத்தகங்களை உங்கள் மொபைலில் படிக்க புதிய Vikatan APP

MUST READ