Vikatan.com

www.vikatan.com would like to send you push notifications.

Notifications can be turned off anytime from browser settings.

பிளாட்ஸ் குளோபல் 250 - ஓஎன்ஜிசி மற்றும் ரிலையன்ஸ் முன்னிலை!

 பிளாட்ஸ் குளோபல் 250 தரவரிசை பட்டியலில்  இந்தியாவின் எனெர்ஜி துறை சார்ந்த நிறுவனங்களில் ஓஎன்ஜிசி மற்றும் ரிலையன்ஸ் இண்டஸ்ட்ரீஸ் ஆகிய இரண்டு நிறுவனங்களும் முன்னிலை வகிக்கின்றன. 2013-ம் ஆண்டில் 22-வது தரவரிசையில் இருந்த ஓஎன்ஜிசி நிறுவனம், இந்த ஆண்டில் 21-வது இடத்தை பெற்றிருக்கிறது. நிறுவனங்களின் சொத்து மதிப்பு, வருமானம், லாபம், நிறுவனம் மேற்கொண்டிருக்கும் முதலீட்டின் மீதான வருமானம் ஆகிய காரணிகளை கொண்டு அளவிடப்பட்டிருக்கிறது.

இந்த ஆண்டு 22-வது இடத்தை ரிலையன்ஸ் இன்டஸ்ட்ரீஸ் நிறுவனம் பிடித்திருக்கிறது. ஆனால் 2013-ல் ரிலையன்ஸ் இன்டஸ்ட்ரீஸ் நிறுவனம் 19-வது இடத்தில் இருந்தது குறிப்பிடத்தக்கது. இந்தியன் ஆயில் நிறுவனம் இந்த 2013-ல் 80-வது இடத்தில் இருந்தது. இது தனக்கு முன்பிருந்த பல நிறுவனங்களை பின்னுக்குத்தள்ளி இந்த ஆண்டு 43-வது இடத்தை பிடித்திருக்கிறது.

உலகின் மிகப்பெரிய நிலக்கரி உற்பத்தி நிறுவனங்களின் ஒன்றான கோல் இந்தியா நிறுவனம் தனது தரவரிசையிலிருந்து நான்கு இடங்கள் இறங்கி இந்த ஆண்டு 47-வது இடத்தை தக்க வைத்திருக்கிறது. அதே போல என்டிபிசி நிறுவனம் இந்த தரவரிசை பட்டியலில் ஒரு இடம் இறங்கி 50-வது இடத்தை பெற்றிருக்கிறது. இந்த தரவரிசை பட்டியலில் பிபிசிஎல் (66), கெயில் (197), கெய்ர்ன் இந்தியா (104), ஆயில் இந்தியா (208) மற்றும் எஸ்ஸார் ஆயில் (232) ஆகிய நிறுவனங்களும் இடம் பெற்றுள்ளன.

விகடன் இதழ்கள் மற்றும் இ-புத்தகங்களை உங்கள் மொபைலில் படிக்க புதிய Vikatan APP

MUST READ