Vikatan.com

www.vikatan.com would like to send you push notifications.

Notifications can be turned off anytime from browser settings.

[X] Close

குஜராத்தில் 2-வது மையம் - அமேஸான் நடவடிக்கை!

ஆன்லைன் ரீட்டெய்ல் நிறுவனங்களில் மிகவும் பிரபலமானது அமேஸான். அமெரிக்காவைச் சார்ந்த இந்த நிறுவனம் குஜராத் மாநிலத்தில் இரண்டாவது செயல்பாட்டு மையத்தை தொடங்க இருப்பதாகவும், இதற்காக இரண்டு பில்லியன் டாலர் (ரூபாய் மதிப்பில் 12,280 கோடி) முதலீடு செய்ய இருப்பதாகவும் தெரிவித்துள்ளது.

இந்த நிறுவனம் இந்தியாவில் ஏற்கெனவே மும்பை, பெங்களூரு, டெல்லி, சென்னை, ஜெய்பூர், அஹமதாபாத் மற்றும் தாரு (கூர்கான் புறநகர்) ஆகிய ஏழு இடங்களில் தனது மையங்களை அமைத்து சிறப்பாக செயல்பட்டு வருவது குறிப்பிடத்தக்கது. இந்த மையத்தை அடுத்த வருடமே தொடங்குவது குறித்து இந்த நிறுவனம் குஜராத் மாநில அரசுடன் பேச்சுவார்த்தை நடத்தியுள்ளது. அதனால் அம்மாநில அரசு விரைவிலேயே அமேஸானின் செயல்பாட்டு மையம் தொடங்குவது குறித்த விவரங்களை வெளியிடக் கூடும் என்று எதிர்பார்க்கப்படுகிறது.

அமேஸான் நிறுவனம் இந்தியாவின் ஃப்ளிப்கார்ட், ஸ்நேப்டீல் மற்றும் இதர ஆன்லைன் ரீடெய்ல் நிறுவனங்களுக்கு போட்டியாக இருந்து  வருகிறது. இந்த நிறுவனம் இந்தியாவின் ஏழு இடங்களில் அமைத்துள்ள செயல்பாட்டு மையங்களின் மொத்த பரப்பளவு மட்டும் ஐந்து லட்சம் சதுர அடி என்பதும் கவனிக்கத்தக்க விஷயமாகும். இந்த திட்டம் நடைமுறைக்கு வரும்போது அம்மாநிலத்தின் வருவாய் மேம்படுவது மட்டுமல்லாமல் அங்குள்ள சிறு மற்றும் நடுத்தர தொழில்களின் வளர்ச்சி பெறும், வேலைவாய்ப்புகள் அதிகரிக்கும் என்று எதிர்பார்க்கப்படுகிறது.

விகடன் இதழ்கள் மற்றும் இ-புத்தகங்களை உங்கள் மொபைலில் படிக்க புதிய Vikatan APP
Advertisement
Advertisement
Advertisement

MUST READ

Advertisement
Advertisement
[X] Close