Vikatan.com

www.vikatan.com would like to send you push notifications.

Notifications can be turned off anytime from browser settings.

ஃபிக்ஸ்ட் டெபாசிட் வட்டி விகிதம் குறைப்பு.

ஆந்திரா பேங்க்,  பேங்க் ஆஃப் இந்தியா போன்றவை  ஃபிக்ஸ்ட் டெபாசிட் திட்டங்களுக்கான வட்டி விகிதத்தை குறைத்துள்ளது. ஆர்பிஐ வட்டி விகிதத்தை விரைவில் குறைக்கும் என்பதால் வங்கிகள் இந்த நடவடிக்கையை எடுத்து உள்ளன. ஏற்கனவே எஸ்பிஐ, பேங்க ஆஃப் பரோடா ஆகிய வங்கிகள் வட்டி விகிதத்தை குறைத்திருக்கின்றன.
 
எஸ்பிஐ வங்கி 1-3 வருட எஃப்டி வட்டிவிகிதத்தை  0.25 சதவிகிதம் குறைத்து 8.75 சதவிகிதமாக்கி உள்ளது.
 
பேங்க ஆஃப் பரோடா மற்றும் பேங்க ஆஃப் இந்தியா ஆகிய வங்கிகள் (1-2 ஆண்டுகளுக்கு வைப்பு நிதிக்கு)0.15 சதவிகிதம் வட்டி விகிதத்தை குறைத்து 8.9 சதவிகிதமாக உள்ளது.
ஆந்திரா பேங்க் ஒராண்டில் முதிர்வடையும் வைப்பு  நிதிகளுக்கும் 0.75 சதவிகிதம் வட்டியை குறைத்துள்ளது.
 
கடந்த மாதம் எஸ்பிஐ, ஐசிஐசிஐ வங்கி, சென்ட்ரல் பேங்க் ஆஃப் இந்தியா, ஒரியண்டல் வங்கி ஆகிய வங்கிகளும் வட்டி விகிதத்தை குறைத்தன. 
விகடன் இதழ்கள் மற்றும் இ-புத்தகங்களை உங்கள் மொபைலில் படிக்க புதிய Vikatan APP

MUST READ