Vikatan.com

www.vikatan.com would like to send you push notifications.

Notifications can be turned off anytime from browser settings.

பின்னலாடை ஏற்றுமதி வர்த்தக மதிப்பு 16% அதிகரிப்பு!

திருப்பூரில் உள்ள பின்னலாடை நிறுவனங்கள் வெளிநாடுகள் பலவற்றிடமிருந்து ஆர்டர்களை பெற்று ஆடைகளை உற்பத்தி செய்து ஏற்றுமதி செய்கின்றன. சில ஆண்டுகளாக பின்னலாடை ஏற்றுமதியில் இருந்த பிரச்னைகள் விலகி பின்னாலாடை ஏற்றுமதியானது தற்போது அதிகரித்துள்ளது. இதனால் அத்தொழில் துறையானது முன்னேற்ற பாதையை நோக்கி பயணிக்கிறது.

நடப்பு நிதி ஆண்டின் முதல் இரு காலாண்டு நிலவரப்படி பின்னலாடை ஏற்றுமதி வர்த்தக மதிப்பானது 16% அதிகரித்து 10,050 கோடி ரூபாயாக காணப்படுகிறது. இது இதற்கு முந்தைய நிதி ஆண்டின் இதே காலகட்டத்தில் 8,650 கோடி ரூபாயாக இருந்தது குறிப்பிடத்தக்கது. தற்போதைய நிலையானது தொடரும் போது திருப்பூரின் ஏற்றுமதி வர்த்தக மதிப்பு 21,000 கோடி ரூபாயாக அதிகரித்து விடும் என்று எதிர்பார்க்கப்படுகிறது.

அதே சமயத்தில், தமிழக மின்வாரிய ஒழுங்குமுறை ஆணையம் அறிவித்துள்ளபடி, மின்கட்டணம் உயர்ந்தால் தொழில் துறை பாதிக்கப்படும் என்பது இத்துறை சார்ந்தவர்களின் அச்சமாக இருக்கிறது.

அதுமட்டுமில்லாமல், மத்திய அரசு, புதிய வெளியுறவு கொள்கையில், 3% வட்டி மானியம் வழங்க வேண்டும். ஐரோப்பா மற்றும் கனடா நாடுகளுடன் வரியில்லா வர்த்தக ஒப்பந்தம் கையெழுத்தாக முயற்சிக்க வேண்டும் என்பது இவர்களின் எதிர்பார்ப்பாக இருக்கிறது.

விகடன் இதழ்கள் மற்றும் இ-புத்தகங்களை உங்கள் மொபைலில் படிக்க புதிய Vikatan APP

MUST READ