Vikatan.com

www.vikatan.com would like to send you push notifications.

Notifications can be turned off anytime from browser settings.

முன்னணியில் சாம்சங் ஸ்மார்ட் போன்கள்!

முன்னணி ஸ்மார்ட் போன் நிறுவனமான சாம்சங் இந்தியாவில் தனது தொழில் விரிவாக்கம் செய்வதற்கு முடிவெடுத்துள்ளது. குறிப்பாக,மைக்ரோமேக்ஸ் ஸ்மார்ட் போன்களுக்கு உள்ள சந்தையை கைப்பற்றுவதை தனது இலக்காக கொன்டு செயல்படப் போவதாக அது அறிவித்துள்ளது.
 
 
இந்திய மொபைல் போன் சந்தையில் மைக்ரோமேக்ஸ் முதலிடத்திலும், சாம்சங் மற்றும் நோக்கியா முறையே இரண்டாவது மற்றும் மூன்றாவது இடத்தையும் தக்க வைத்துள்ளன.  
 
சாம்சங் நிறுவனம் தனது முந்தைய காலாண்டில் 25.3 சதவிகித சந்தை மதிப்பை கையில் வைத்திருந்தது.  தற்போதைய மூன்றாவது காலாண்டில் 26 சதவிகித சந்தையை கைப்பற்றி உள்ளது.
 
குறிப்பாக, ரூ. 5,000 முதல் ரூ.15,000 வரை விலை கொண்ட செல்போன்கள் தயாரிப்பதில் கவனம் செலுத்துவதன் மூலம் இந்திய ஸ்மார்ட்போன்கள் சந்தையை கைப்பற்ற சாம்சங் திட்டமிட்டுள்ளது. 
விகடன் இதழ்கள் மற்றும் இ-புத்தகங்களை உங்கள் மொபைலில் படிக்க புதிய Vikatan APP

MUST READ