Vikatan.com

www.vikatan.com would like to send you push notifications.

Notifications can be turned off anytime from browser settings.

பங்குச்சந்தை 3.30 மணி நிலவரம்

3.30 மணி நிலவரம்:

27940.67 புள்ளிகளுடன் ஆரம்பித்த இன்றைய சென்செக்ஸ், சந்தையின் முடிவில் 27915.88 புள்ளிகளில் முடிவடைந்துள்ளது. அதே போல 8344.1 புள்ளிகளில் தொடங்கிய நிஃப்டி சந்தை, சந்தை முடியும்போது 8,338.30 புள்ளிகளாக முடிவடைந்தது. பிஎஸ்இ இண்டெக்ஸ் குறியீடுகளில் ஆட்டோ (+8.39%), கேப்பிட்டல் கூட்ஸ் (+90.71%), எஃப்எம்சிஜி (+23.94%) மற்றும் ஹெல்த்கேர் (+145.57%) ஆகியவை அதிகரித்தும், கன்ஸ்யூமர் டியூரபிள் (-16.5%), மெட்டல் (-358.62%) மற்றும் ஆயில் அண்டு கேஸ் (-73.05%) ஆகியவை குறைந்தும் காணப்பட்டது.

2.00 மணி நிலவரம்:

மும்பை பங்குச் சந்தை குறியீடான சென்செக்ஸ் மதியம் 2.00 மணி நிலவரப்படி 27894 புள்ளிகளோடு வர்த்தகம் ஆகிறது. தேசிய பங்குச்சந்தையான நிஃப்டி 8336 புள்ளிகளில் வர்த்தகமாகி வருகிறது. 
 
சன் பார்மா மற்றும் லுபின் நிறுவனப் பங்குகள் ஏற்றத்தில் வர்த்தகமாகிறது. கெய்ரன் இந்தியா, என்எம்டிசி நிறுவன பங்குகள் விலை சரிந்தும் வர்த்தகம் ஆகிறது.
 
டாலருக்கு நிகரான இந்திய ரூபாயின் மதிப்பு ரூ. 61.41 என்கிற அளவில் உள்ளது. 
 
பங்குச்சந்தை 12.40 நிலவரம் 
 
மும்பை பங்குச்சந்தை குறியீடான சென்செக்ஸ் இன்று காலை 10 மணியளவில்  28,000 என்ற புதிய உச்சத்தை தொட்டபிறகு சற்றே இறக்கம் கண்டு  27,890 புள்ளிகள் என்கிற அளவில் வர்த்தகமாகி வருகிறது.
 
வங்கி மற்றும் ஆட்டோ மொபைல் துறை பங்குகளின் விலை அதிகரித்தும், மெட்டல் மற்றும் ஆயில் நிறுவன பங்குகளின் விலை சரிந்தும் வர்த்தகமாகி வருகிறது. தேசிய பங்குச்சந்தையான நிஃப்டி 8329.30 புள்ளிகளுடன் வர்த்தகமாகி வருகிறது.  
 
சன்பார்மா, இன்டஸ்இந்த் பேங்க், எஸ்பிஐ பங்குகள் விலை அதிகரித்துள்ளது. கெய்ரன் இந்தியா, என்எம்டிசி பங்குகள் விலை குறைந்து வர்த்தகமாகி வருகிறது. 
 

 

விகடன் இதழ்கள் மற்றும் இ-புத்தகங்களை உங்கள் மொபைலில் படிக்க புதிய Vikatan APP

MUST READ