Vikatan.com

www.vikatan.com would like to send you push notifications.

Notifications can be turned off anytime from browser settings.

லூப் மொபைல் நிறுவனத்தை வாங்குவதை கைவிடுகிறது பார்தி ஏர்டெல்!

  தொலைத்தொடர்பு நிறுவனமான பார்தி ஏர்டெல் ரூ. 700 கோடிக்கு லூப் மொபைல் நிறுவனத்தை கையகப்படுத்தும் திட்டத்தை கைவிடுகிறது.

மும்பையை தலைமையிடமாகக் கொண்டு இயங்கிவரும் லூப் மொபைல் நிறுவனத்தின் வர்த்தகத்தை கைமாற்றிக் கொள்ள மார்ச் 2014 ல் இரண்டு நிறுவனங்களும் மத்திய தொலைத் தொடர்ப்பு அமைச்சகத்துக்கு விண்ணப்பித்திருந்தன.  

இதற்கிடையே லூப் மொபைல் நிறுவனம் நஷ்டத்தை சந்தித்து வந்ததால் இந்த முடிவிலிருந்து பார்தி ஏர்டெல் பின்வாங்கும் என்கிற பேச்சும் இருந்தது.

 
 
இந்த நிலையில் தொலை தொடர்பு அமைச்சகம் இந்த கையகப்படுத்தலுக்கு ஒப்புதல் அளித்துள்ளது. இந்த நிறுவனத்தோடு சேர்ந்து இதன் சகோதர நிறுவனமான லூப் டெலிகாம் நிறுவனத்தின் தொலை தொடர்பு லைசன்ஸ் விரைவில் முடியவுள்ளது.  அரசுக்கு கட்ட வேண்டிய கட்டணங்கள் உள்பட ரூ. 808 கோடி என மதிப்பிடப்படுள்ளது. ஆனால் பிப்ரவரி மாதம் ரூ 700 கோடிக்கு என்று வர்த்தக ஒப்பந்தம் கையெழுத்தாகியுள்ளது. 
 
இந்த வர்த்தக ஒப்பந்தபடி லூப் மொபைல் பயன்படுத்தும் சுமார் 3 மில்லியன் வாடிக்கையாளர்கள் ஏர்டெல் தனது சேவைக்கு மாற்றிக் கொண்டது.  இந்த கையகப்படுத்துதலை தற்போது கைவிடுவதாக அறிவித்துள்ளது. ஆனால் வாடிக்கையாளர்களை மாற்றிக்கொண்டதன் மூலம் இந்திய மாநகரங்களில் அதிக வாடிக்கையாளர்களை கொண்டிருக்கும் நிறுவனமாக ஏர்டெல் பெயரெடுக்கிறது. 
 
விகடன் இதழ்கள் மற்றும் இ-புத்தகங்களை உங்கள் மொபைலில் படிக்க புதிய Vikatan APP

MUST READ