Vikatan.com

www.vikatan.com would like to send you push notifications.

Notifications can be turned off anytime from browser settings.

ஜிஎஸ்கே கன்ஸ்யூமர் ஹெல்த்கேர் நிகர லாபம் 9% அதிகரிப்பு!


ஜிஎஸ்கே கன்ஸ்யூமர் ஹெல்த்கேர் நிறுவனம் நடப்பு நிதி ஆண்டின் இரண்டாவது காலாண்டு முடிவை வெளியிட்டிருக்கிறது. இந்த நிறுவனத்தில் நிகரலாபம் செப்டம்பர் காலாண்டில் 9.09% அதிகரித்து 160.29 கோடி ரூபாயாக உள்ளது.

இது இதற்கு முந்தைய நிதி ஆண்டின் இதே காலாண்டில் 146.93 கோடி ரூபாயாக இருந்தது. இந்த நிறுவனத்தின் நிகர விற்பனை 10.56 சதவிகிதம் அதிகரித்து 1,074.66 கோடி ரூபாயாக அதிகரித்துள்ளது. இது இதற்கு முந்தைய ஆண்டின் இதே காலண்டில் 971.94 கோடி ரூபாயாக இருந்தது.

நிறுவனத்தின் செலவினங்களும் அதிகரித்திருப்பதை இரண்டாம் காலாண்டு புள்ளி விவரத்தில் இந்த நிறுவனம் தெரிவித்துள்ளது. தற்போது 11.56% அதிகரித்து 930.02 கோடியாக காணப்படும் செலவு இதற்கு முந்தைய நிதி ஆண்டின் இதே காலாண்டில் 833.63 கோடி ரூபாயாக இருந்தது.

இன்றைய தினத்தில் (5.11.14) பங்குச் சந்தை முடியும்போது, 3.6% அதாவது ரூ. 170  இறங்கி ரூ.5414.75-க்கு வர்த்தகமானது.
 

விகடன் இதழ்கள் மற்றும் இ-புத்தகங்களை உங்கள் மொபைலில் படிக்க புதிய Vikatan APP

MUST READ