Vikatan.com

www.vikatan.com would like to send you push notifications.

Notifications can be turned off anytime from browser settings.

யுனைடெட் இந்தியா முதலாம் அரையாண்டு நிகர லாபம் ரூ 376 கோடி

யுனைடெட் இந்தியா காப்பீட்டு நிறுவனம் தனது அரையாண்டுக் கணக்கை 2014 அக்டோபர் 21ஆம் தேதி இறுதி செய்தது. 2014 செப்டம்பர் 30 முடிய நிறுவனத்தின் பிரிமியம் வருவாய் ரூ. 5291 கோடிகள். காப்பீட்டுத் துறை வளர்ச்சி 8% ஆகக் கணிக்கப்பட்ட நிலையில், அதை விட அதிகமாக இந்நிறுவனம் 11% வளர்ச்சியைக் கண்டுள்ளது. சுகாதாரக் காப்பீடு 22%, மோட்டார் வாகனக் காப்பீடு 18% மற்றும் நெருப்புக் காப்பீடு 5.6% வளர்ச்சி ஆகியவை நிறுவனத்தின் ஒட்டு மொத்த வளர்ச்சிக்கு வழிவகுத்துள்ளன. 
 
 
ஜம்மு & காஷ்மீர் மாநிலத்தில் வெள்ளப் பெருக்கு காரணமாக ரூ 300 கோடிகள் மதிப்பிலான 2726 இழப்புக் கோரிக்கைகள் பதிவாயின.
 
பிரத்யேக மற்றும் சிறப்பு முனைவுகள் காரணமாக ஜம்மு & காஷ்மீர் வெள்ளப் பெருக்கு இழப்பீட்டுக் கோரிக்கைகளுள் இதுவரை 75% தீர்த்து வைக்கப்பட்டுள்ளன. திறமையான இழப்பு கோரிக்கை மேலாண்மையால் கோரிக்கை விகிதம் இரண்டாம் அரையாண்டில் 83.75% இல் இருந்து 81.70% ஆகக் குறைந்துள்ளது. 
 
மிலிந்த் காரத்,
தலைவர் & மேலாண் இயக்குனர்

நடப்பு முதலாம் அரையாண்டு வரிக்குப் பிந்திய லாபம் ரூ. 376.24 கோடிகள். இது இதே காலகட்டத்தில் முந்தைய ஆண்டு வரிக்குப் பிந்திய லாபமான ரூ. 364.54 கோடிகளை விட அதிகமாகும். முதலாம் அரையாண்டு முதலீடுகள் மீதான லாபம் ரூ. 1067.40 கோடிகள். இது அதே காலகட்டத்தில் முந்தைய ஆண்டு முதலீடுகள் மீதான லாபமான ரூ. 914.98 கோடிகளுடன் ஒப்பிடும்போது 16% அதிகமாகும்.  இரண்டாம் காலாண்டில் நிறுவனத்தின் மொத்த முதலீட்டு சந்தை மதிப்பு ரூ. 25,586 கோடிகள். நிறுவனத்தின் நிகர மதிப்பு ரூ 5,738 கோடிகள். இது முந்தைய ஆண்டு நிகர மதிப்பான ரூ. 5361 கோடிகளுடன் ஒப்பிடும்போது அதிகமாகும். காப்பீட்டு ஒழுங்குமுறை கடன் தீர்த் திறன் தேவையான 1.50%க்கும் அதிகமாகக் கடன் தீர்த் திறன் 2.63% என்பது நிறுவனத்தின் வலுவான அடித்தளத்திற்குச் சான்றாக உள்ளது என யுனைடெட் இந்தியா தெரிவித்துள்ளது

 
விகடன் இதழ்கள் மற்றும் இ-புத்தகங்களை உங்கள் மொபைலில் படிக்க புதிய Vikatan APP

MUST READ