Vikatan.com

www.vikatan.com would like to send you push notifications.

Notifications can be turned off anytime from browser settings.

சென்செக்ஸ் 55 புள்ளிகள் உயர்வு!

 இந்திய பங்குச் சந்தை இன்று ஏற்றத்தில் முடிவடைந்தது.  அதாவது தேசிய பங்குச் சந்தையான சென்செக்ஸ் 55 புள்ளிகள் உயர்ந்து 27915 என்ற நிலையில் முடிவடைந்தது. ஆனால்  காலை சென்செக்ஸ் புதிய 28000 என்ற புதிய உச்சத்தை அடைந்தது. மேலும் தேசிய பங்குச் சந்தையான நிஃப்டி இன்றைய வர்த்தகத்தில் 14 புள்ளிகள் அதிகரித்து 8338.30 என்ற நிலையில் வர்த்தகமானது. 

இன்றைய வர்த்தகத்தில் ஆக்ஸிஸ் பேங்க், பிபிசிஎல், டாக்டர் ரெட்டி லேப், ஹெச் சிஎல் லேப், எஸ்பிஐ ஆகிய பங்குகள் விலை 2 சதவிகிதத்துக்கு மேல் அதிகரித்து வர்த்தகமானது. கெயிர்ன் இந்தியா, ஜிண்டால் ஸ்டீல், ஹிண்டால்கோ ஆகிய பங்குகளின் விலை 4 சதவிகிதத்துக்கு மேல் சரிந்து வர்த்தகமானது.
இன்றைய வர்த்தகத்தில்  விலை அதிகரித்த பங்குகள் 1633, விலை குறைந்த பங்குகள் 1385, விலையில் மாற்றம் இல்லாத பங்குகள் 108 ஆகும். 
விகடன் இதழ்கள் மற்றும் இ-புத்தகங்களை உங்கள் மொபைலில் படிக்க புதிய Vikatan APP

MUST READ