Vikatan.com

www.vikatan.com would like to send you push notifications.

Notifications can be turned off anytime from browser settings.

[X] Close

பிடிலைட் இண்டஸ்ட்ரீஸ் நிகரலாபம் 17.23% அதிகரிப்பு!

பிடிலைட் இண்டஸ்ட்ரீஸ் நிறுவனம் நடப்பு நிதி ஆண்டின் இரண்டாம் காலாண்டு முடிவை இன்று (5.11.14) வெளியிட்டது. செப்டம்பர் 30, 2015 நிலவரப்படி இந்த நிறுவனத்தின் நிகரலாபம் 17.23% அதிகரித்து 138.9 கோடி ரூபாயாக உள்ளது.  இது இதற்கு முந்தைய நிதி ஆண்டின் இதே காலாண்டில் 118.48 கோடி ரூபாயாக இருந்தது. அதே போல இந்த நிறுவனத்தின் நிகர விற்பனையும் 14.12% அதிகரித்து 1,248.56 கோடி ரூபாயாக காணப்படுகிறது. இது இதற்கு முந்தைய நிதி ஆண்டின் இதே காலாண்டில் 1,094.07 கோடி ரூபாயாக இருந்தது. 

இந்த நிறுவனத்தின் நிகரலாபம் அரையாண்டு முடிவின் படி பார்க்கும் போது, செப்.30,2014 நிலவரப்படி 307.42 கோடி ரூபாயாக அதிகரித்துள்ளது. இது இதற்கு முந்தைய ஆண்டின் இதே அரையாண்டில் 279.47 கோடி ரூபாயாக இருந்தது. அதே போல நிகர விற்பனையும் 2013-14-ம் நிதி ஆண்டின் முதல் அரையாண்டில் 2,212.88 கோடி ரூபாயாக இருந்தது. இது தற்போது 2,586 கோடி ரூபாயாக அதிகரித்துள்ளது.

இந்த நிறுவனத்தின் பங்குவிலை இன்றைய (5.11.14) பங்குச் சந்தை முடியும்போது 10.20 ரூபாய் இறங்கி 400.85 (-2.48%) ரூபாய்க்கு வர்த்தகமானது.

உங்கள் கருத்தைப் பதிவு செய்யுங்கள்

விகடன் இதழ்கள் மற்றும் இ-புத்தகங்களை உங்கள் மொபைலில் படிக்க புதிய Vikatan APP
Advertisement
Advertisement

MUST READ

Advertisement
Advertisement
[X] Close