Vikatan.com

www.vikatan.com would like to send you push notifications.

Notifications can be turned off anytime from browser settings.

ஸ்டார் ஹெல்த் இன்ஷூரன்ஸ்: ஃபேமிலி ஹெல்த் ஆப்டிமா மறு அறிமுகம்

ஸ்டார் ஹெல்த் இன்ஷூரன்ஸ்: ஃபேமிலி ஹெல்த் ஆப்டிமா புதிய அம்சங்களுடன் மறு அறிமுகம்
 
மருத்துவ செலவுகள் கடுமையாக  உயர்ந்து வருவதால் ஹெல்த் இன்ஷூரன்ஸ் அனைவருக்கும் அத்தியாவசியமாக ஆகியுள்ளது.
 
ஸ்டார் ஹெல்த், ஃபேமிலி ஹெல்த் ஆப்டிமா கவர் என்ற தனது திட்டத்தை மறுஅறிமுகம் செய்யப்படும் என அறிவித்துள்ளது.
மறுஅறிமுகம் குறித்து ஸ்டார் ஹெல்த் அண்ட் அல்லைட் இன்ஷூரன்ஸ் கம்பெனியின் செயல் இயக்குனர் டாக்டர் எஸ். பிரகாஷ் கூறுகையில், “புதிய மாற்றங்கள் மூலம் வாடிக்கையாளர்கள் காப்பீட்டு பாலிசியிலிருந்து அதிகபட்ச பயன்களைப் பெறுவதை உறுதிப்படுத்தி உள்ளோம்." என்றார்.
 
இந்த திட்டத்தில் புதிதாக இணைக்கப்பட்டுள்ள சில புதிய பிரத்யேக அம்சங்கள் வருமாறு :
உடனடி ரீசார்ஜ் பயன் : முதலில் காப்பீடு செய்யப்பட்ட தொகை போதுமானதாக இல்லாத போது, காப்பீட்டு தொகையை வாடிக்கையாளர் காப்பீட்டு தொகையை இலவசமாக கூடுதலாக அதிகரித்துக் கொள்ளலாம்.
 
புதிதாக பிறக்கும் குழநதைக்கும் காப்பீடு : 15 லட்சம் ரூபாய் வரையில் காப்பீட்டு தொகை இருந்தால் அதில் 10 சதவிகிதம் வரை புதிதாக பிறந்த குழழந்தைகளுக்கு இந்த பாலிசி தானாக காப்பீடு அளிக்கும்.
 
உறுப்புகளை தானம் அளிப்பவருக்கு அதற்கான செலவுகளுக்கு காப்பீடு : காப்பீடு செய்துகொள்பவர் உறுப்புகளை தானமாக பெறும் போது உறுப்பு தானம் செய்பவருக்கு ஆகும் செலவுகள் திருப்பி கொடுக்கப்படும். காப்பீட்டு தொகையில் 10 சதவிகிதம் ஒரு லட்சம் ரூபாய் வரை அளிக்கப்படும்.
 
வரையறையற்ற மருத்துவமனையில் தங்கியிருக்கும் செலவு : இந்த பாலலிசி 3 நாட்களுக்கு மேல் மருத்துவமனையில் தங்கியிருக்கும் போது ஆகும் செலவை வரையறையின்றி அளிக்கிறது.
 
பரிசோதனை செலவுகள் : பாலிசி எடுத்த 3 ஆண்டுகளுக்கு பின்னர் இந்தப் பாலிசி ரூ. 5000 வரை பரிசோதனை செலவுகளை இந்த பாலிசி அளிக்கிறது.
 
மருத்வமனை சிகிச்சைக்கு முன்பும் பின்பும் பயன்கள் நீட்டிப்பு : இது 60 நாட்களுக்கு முன்பும் பின்னர் 90 நாட்களுக்கும் கிடைக்கும். வரையறை இல்லை.
 
விகடன் இதழ்கள் மற்றும் இ-புத்தகங்களை உங்கள் மொபைலில் படிக்க புதிய Vikatan APP

MUST READ