Vikatan.com

www.vikatan.com would like to send you push notifications.

Notifications can be turned off anytime from browser settings.

பங்குச்சந்தை 3.00 மணி நிலவரம்

 

      3.00 மணி நிலவரம்

சந்தை தொடர்ந்து சரிவிலேயே வர்த்தகமாகி வருகிறது. மதியம் 3.00 மணி நிலவரப்படி 27841 புள்ளிகளுடன் மும்பை பங்குச்சந்தை சென்செக்ஸ் வர்த்தகமாகி வருகிறது.

தேசிய பங்குச்சந்தையான நிஃப்டி 8329 புள்ளிகளுடன்ன் வர்த்தகமாகிறது.

 

டி எல் எஃப், டாக்டர் ரெட்டீஸ் லேபாரட்டரீஸ் பங்குகள் விலை ஏற்றத்திலும், கெய்ல், பிஹெச்இல்எல் நிறுவன பங்குகள்ள் விலை சரிந்தும் வர்த்தகமாகி வருகிறது.

 

சென்செக்ஸ் 100 புள்ளிகள் சரிவு. 

11.30 நிலவரம்
சென்செக்ஸ் 100 புள்ளிகள் சரிவு.  மும்பை பங்குச் சந்தை சென்செக்ஸ் இன்றைய காலை வர்த்தகத்தில் சுமார் 119 புள்ளிகளுக்கு மேல் சரிந்து 27796 என்ற நிலையில்  வர்த்தகமானது.  இதே போல தேசிய பங்குச் சந்தையான நிஃப்டியும் 24 புள்ளிகள் சரிந்து 8313 என்ற நிலையில் வர்த்தகமாகி வருகிறது. 
இதில் டிஎல்எஃப் பங்கின் விலை சுமார் 4.5 சதவிகிதத்துக்கு மேல் விலை உயர்ந்து வர்த்தகமானது. அதேபோல ஆக்ஸிஸ் பேங்க் 2.8 %, பிபிசிஎல் 2.4% விலை அதிகரித்து வர்த்தகமாகி வருகி
றது. 
 
அதே நேரத்தில் என் எம்டிசி 2.4%, ஹீரோ மோட்டோ கார்ப் 2.2%, ஹெசிஎஃப்சி பேங்க் 1.8%, கெயில் 1.6 % விலை குறைந்து வர்த்தகமாகி வருகிறது. 
பேங்க் ஆஃப் பரோடா பங்கின் விலை 2.8 சதவிகிதம் சரிந்து வர்த்தகமாகி வருகிறது. ஜூலை - செப்டம்பர் காலாண்டில் இந்த வங்கின் நிகர லாபம் 5.5 சதவிகிதம் குறைதுள்ளது இதற்கு முக்கிய காரணம் ஆகும். 
 

 

 நிலையான வர்த்தகத்தில் சென்செக்ஸ், நிஃப்டி!

 
இன்று காலை துவங்கிய பங்குச் சந்தை ஏற்ற இறக்கத்தில் நிலையாகவே காணப்பட்டது. காலை 9:45 மணி நிலவரப்படி மும்பை பங்குச் சந்தையான சென்செக்ஸ் 10 புள்ளிகள் சரிந்து 27905 என்ற அளவிலும், தேசிய பங்குச் சந்தையான நிஃப்டி 2 புள்ளிகள் அதிகரித்து 8340 என்ற அளவிலும் வர்த்தகமாகியது.
 
அமெரிக்க டாலரின் மதிப்பு நேற்றைய நியூயார்க் வர்த்தகத்தில் அதிகரித்து காணப்பட்டது, ரூபாயின் மதிப்பு 11 பைசா குறைய காரணமானது. இதன் தாக்கம் இன்றைய பங்குச் சந்தையில் பிரதிபலித்தது.
 
அமெரிக்க டாலருக்கு நிகரான இந்திய ரூபாயின் மதிப்பு 61.55 ரூபாயாகவும், 10 கிராம் தங்கத்தின் விலை 25,461 ரூபாயாகவும் உள்ளது. டிஎல்எஃப்,அம்புஜா சிமெண்ட்ஸ், ஏசிசி பங்குகள் விலை அதிகரித்தும்,ஹீரோ மோட்டோ கார்ப், எம் & எம், கோல் இந்தியா பங்குகள் விலை குறைந்தும் வர்த்தகமாகின.பார்மா துறை பங்குகளான ரான்பாக்ஸி, சன்பார்மா ஆகியவை விலை குறைந்து காணப்பட்டன.
 

 

விகடன் இதழ்கள் மற்றும் இ-புத்தகங்களை உங்கள் மொபைலில் படிக்க புதிய Vikatan APP

MUST READ