Vikatan.com

www.vikatan.com would like to send you push notifications.

Notifications can be turned off anytime from browser settings.

[X] Close

100 ஸ்மார்ட் நகரங்கள் திட்டம்: இந்தியாவுடன் இணைந்து செயல்பட சிங்கப்பூர் ஆர்வம்!

100 ஸ்மார்ட் நகரங்கள் திட்டம்: இந்தியாவுடன் இணைந்து செயல்பட சிங்கப்பூர் ஆர்வம்!
 
இந்தியாவில் மத்திய அரசு நாடு முழுவதும்  100 ஸ்மார்ட் நகரங்களை அறிமுகப்படுத்தப்போவதாக அறிவித்துள்ளது. சிங்கப்பூர் அரசு இந்த ஸ்மார்ட் நகரங்களை உருவாக்குவதில் உதவ உள்ளதாக ஆர்வம் காட்டியுள்ளது.
 
இந்தியாவில் 500 நகரங்களை உருவாக்க தொழில்நுட்ப ரீதியாக்க உதவ உள்ளதாகவும், தற்போது புதிதாக உருவாக்கப்பட்டுள்ள ஆந்திராவின் தலைநகர் கட்டுமானத்திலும் உதவவும் விருப்பம் தெரிவித்துள்ளதாக சிங்கப்பூர் அமைச்சகம் தகவல் வெளியிட்டுள்ளது.
 
இது குறித்த விருப்ப ஒப்புதலை நகர்புற மேம்பாட்டு துறை அமைச்சர் வெங்கையா நாயுடுவிடம் அளித்துள்ளதாகவும், அவர் நகர்புறத்தில் உள்ள தொழில்நுட்ப வசதிகளுக்கும், இ-அர்பன் மையமாக்குதலுக்கும் சிங்கப்பூர் உதவியாக இருக்கும் என்று கூறியுள்ளதாக கூறப்படுகிறது.
 
இந்த திட்டத்தை மத்திய அரசு 7,060 கோடியை இந்த திட்டத்திற்காக ஒதுக்கியுள்ளது. மத்திய அரசும் ஆர்வம் காட்டும் என தெரிவதால் இந்த திட்டத்தில் சிங்கப்பூர் அரசு இந்தியாவுடன் இணைந்து செயல்படும் என்று தெரிகிறது.
விகடன் இதழ்கள் மற்றும் இ-புத்தகங்களை உங்கள் மொபைலில் படிக்க புதிய Vikatan APP
Advertisement
Advertisement
Advertisement

MUST READ

Advertisement
Advertisement
[X] Close