Vikatan.com

www.vikatan.com would like to send you push notifications.

Notifications can be turned off anytime from browser settings.

10 நாட்களில் ரூ.1200 விலை குறைந்த தங்கம்!

10 நாட்களில் ரூ.1200 விலை குறைந்த தங்கம்!

தங்கத்தின் விலை கடந்த ஒரு வாரமாக சரிந்துக் கொண்டே வருகிறது. தினமும் ஒரு சவரனுக்கு 50 முதல் 100 ரூபாய் வரை விலை குறைந்து வருகிறது.  டாலரின் மதிப்பு வலிமையடைந்து வருவதாலும், பங்குச் சந்தை தொடர்ந்து உச்சத்தை அடைந்து வரும் பொருட்டு தங்கத்தின் விலை கடுமையாக விழ்ச்சியடைந்து வருகிறது. பங்குச் சந்தை வேகமாக வளர்ச்சி அடைந்து வருவதால் முதலீட்டாளர் பங்குச் சந்தை முதலீட்டை விரும்பு செய்கிறார்கள். மேலும் தங்கத்தில் செய்து வரும் முதலீட்டை தவிர்க்கவும் செய்து வருகிறார்கள். 
 
இதன் விளைவாக 22 காரட் 8கிராம் தங்கத்தின்  விலை கடந்த பத்து நாளில் மட்டும் சவரனுக்கு 1200 ரூபாய் விலை குறைந்துள்ளது. இதன் விலைவாக சிறுமுதலீட்டாளர்கள் தங்கத்தை ஆபரணத் தேவைக்காக வாங்க துவங்கியுள்ளார்கள். 
தங்கத்தின் விலை இன்னும் சில நாட்களுக்கு குறையவே செய்யும் என வல்லுநர்கள் கருத்து தெரிவிக்கிறார்கள்.
விகடன் இதழ்கள் மற்றும் இ-புத்தகங்களை உங்கள் மொபைலில் படிக்க புதிய Vikatan APP

MUST READ