Vikatan.com

www.vikatan.com would like to send you push notifications.

Notifications can be turned off anytime from browser settings.

டிஎல் எஃப் பங்கின் விலை 6% உயர்வு.

டிஎல்எஃப் பங்கின்  விலை இன்றைய (07.11.2014) வர்த்தகத்தில் சுமார் 6 சதவிகிதம் விலை அதிகரித்துள்ளது. கடந்த மாதத்தில் இந்த நிறுவனத்தின் இயக்குநர்களுக்கு பங்குச் சந்தையில் ஈடுபட  செபி தடை விதித்தது. ஐபிஒ வெளியிட்டத்தில் முறைகேடு செய்தாக கூறி இந்த நிறுவனத்தின் இயக்குநர்கள் பங்கு வர்த்தக
த்தில் ஈடுபடக்கூடாது என கூறி இருந்தது. இதனால் இந்த பங்கின் விலை கடுமையாக வீழ்ச்சியடைந்தது.  
இதனால் டிஎல்எஃப் நிறுவனம் முதலீடு செய்திருந்த பணத்தை வெளியில் எடுக்க முடியாமல் இருந்தது.  இந்த நிறுவனம் மியூச்சுவல் ஃபண்டுகளில் முதலீடு செய்திருந்த 1806 கோடி ரூபாயை எடுக்க முடியாத நிலை இருந்தது. இதற்காக செபியிடம் சிறப்பு அனுமதி கேட்டு டிஎல்எஃப் நிறுவனம் விண்ணப்பித்திருந்தது.
 
தற்போது செபி முதலீட்டை வெளியே எடுப்பதற்கு இடைக்கால விலக்கு அளித்துள்ளது. அதாவது நவம்பர் மாதத்தில் ரூ. 767கோடியும், டிசம்பர் மாதத்தில் மீதமுள்ள ரூ. 1039 கோடி முதலீட்டையும் எடுத்துக் கொள்ள அனுமதி அளித்துள்ளது.இதனால் இந்த பங்கின் விலை மீண்டும் உயர ஆரம்பித்துள்ளது. இன்றைய வர்த்தகத்தில் பங்கின் விலை 6 சதவிகிதம் உயர்ந்து ரூ. 134.80 என்ற நிலையில் வர்த்தகமாகி வருகிறது. 
விகடன் இதழ்கள் மற்றும் இ-புத்தகங்களை உங்கள் மொபைலில் படிக்க புதிய Vikatan APP

MUST READ