Vikatan.com

www.vikatan.com would like to send you push notifications.

Notifications can be turned off anytime from browser settings.

சென்செக்ஸ் 47 புள்ளிகள் சரிவு!

 

வாரக் கடைசி நாளான இன்று வெள்ளிக் கிழமை பங்குச் சந்தை இறக்கமான வர்த்தகத்தைக் கண்டது.  

மும்பை பங்குச் சந்தை குறியீடான சென்செக்ஸ் இன்றைய வர்த்தக தொடக்கத்தில் ஏற்றமாக இருந்தது என்றாலும் சற்று நேரத்தில் இறங்குமுகம் கண்டது. தொடர்ந்து இறக்கமாவே நடந்த வர்த்தகம் சந்தை நேர முடியில் 47.25 புள்ளிகள் சரிந்து 27868.63 புள்ளிகளில் நிலை கொண்டது.
 
தேசியப் பங்குச் சந்தையின் குறியீடான நிஃப்டியின் போக்கும் இன்று ஏற்ற இறக்கமாக இருந்தது என்றாலும் சந்தை நேர முடிவில் 1.30 புள்ளிகள் மட்டும் குறைந்து 8337 புள்ளிகள் நிலை கொண்டது. 
 
 
 
டாலருக்கு நிகரான இந்திய ரூபாயின் மதிப்பு 61.44 ஆக இருக்கிறது. 10 கிராம் தங்கத்தின் விலை 25,481.00 என்கிற அளவிலும் உள்ளது.
 
 ஏற்றத்தைச் சந்தித்த டாப் 5 பங்குகள்:
 டிஎல்எஃப் 6.11%, ஜீ எண்டெர்டெய்ன்மென்ட் 4.79%, டாக்டர் ரெட்டீஸ் லேப் 4.46%, லுபின் 2.75% , சன் பார்மா 2.62%.
 
இறக்கத்தைச் சந்தித்த  
பங்குகள் பிஹெச்இஎல் -3.47%, கெய்ல் -2.56%, ஹீரோ மோட்டோகார்ப் -2.55%, சேச ஸ்டெர்லைட் -1.89%, ஏசியன் பெயிண்ட்ஸ் -1.70%
 
இன்றைய வர்த்தகத்தில்  விலை அதிகரித்த பங்குகள் 1758, விலை குறைந்த பங்குகள் 1923, விலையில் மாற்றம் இல்லாத பங்குகள் 216 ஆகும். 
விகடன் இதழ்கள் மற்றும் இ-புத்தகங்களை உங்கள் மொபைலில் படிக்க புதிய Vikatan APP

MUST READ