Vikatan.com

www.vikatan.com would like to send you push notifications.

Notifications can be turned off anytime from browser settings.

[X] Close

பேங்க் ஆஃப் பரோடா நிகரலாபம் 5.4% குறைவு!


பேங்க் ஆஃப் பரோடா நடப்பு நிதி ஆண்டின் இரண்டாவது காலாண்டு முடிவை வெளியிட்டிருக்கிறது. செப்.30, 2014- நிலவரப்படி இந்த வங்கியின் நிகரலாபம் 5.4% குறைந்து 1,104.22 கோடி ரூபாயாக உள்ளது. இது இதற்கு முந்தைய நிதி ஆண்டின் இதே காலாண்டில் 1,168.10 கோடி ரூபாயாக இருந்தது. நிகர லாபம் குறைந்திருக்கும் அதே சமயம் செப்.30,2013-ல் 10,447.31 கோடி ரூபாயாக இருந்த வங்கியின் மொத்த வருமானம் 11,817.32 கோடி ரூபாயாக அதிகரித்துள்ளது.

அதே போல சென்ற நிதி ஆண்டின் இரண்டாவது காலாண்டில் 80.10 கோடி ரூபாயாக இருந்த வங்கியின் செலவு, நடப்பு நிதி ஆண்டின் இரண்டாவது காலாண்டில் 410.67 கோடி ரூபாயாக அதிகரித்துள்ளது. வங்கியின் வாராகடன் விகிதம் நடப்பு நிதி ஆண்டின் இரண்டாவது காலாண்டில் 3.32 சதவிகிதமாக அதிகரித்துள்ளது. இது இதற்கு முந்தைய நிதி ஆண்டின் இதே காலாண்டில் 3.15 சதவிகிதமாக இருந்தது. அதே சமயம் வங்கியின் நிகர வாராகடன் 1.86 சதவிகிதத்திலிருந்து 1.74 சதவிகிதமாக குறைந்துள்ளது. இன்றைய தினம் பங்குச் சந்தை முடியும்போது பேங்க் ஆஃப் பரோடாவின் ஒரு பங்கு விலை 962.45 ரூபாய்க்கு வர்த்தகமானது.
 

விகடன் இதழ்கள் மற்றும் இ-புத்தகங்களை உங்கள் மொபைலில் படிக்க புதிய Vikatan APP
Advertisement
Advertisement
Advertisement

MUST READ

Advertisement
Advertisement
[X] Close