Vikatan.com

www.vikatan.com would like to send you push notifications.

Notifications can be turned off anytime from browser settings.

அரபிந்தோ பார்மா நிகர லாபம் 58% அதிகரிப்பு!

அரபிந்தோ பார்மா இன்று (7.11.14), நடப்பு நிதி ஆண்டின் இரண்டாவது காலாண்டு முடிவை வெளியிட்டது. இந்த நிறுவனத்தின் நிகர லாபம் செப்டம்பர் 30, 2014- நிலவரப்படி 58.3% அதிகரித்து 372.2 கோடி ரூபாயாக உள்ளது. இது இதற்கு முந்தைய நிதி ஆண்டின் இதே காலாண்டில் 235 கோடி ரூபாயாக இருந்தது குறிப்பிடத்தக்கது. அதே போல நிறுவனத்தின் மொத்த செயல்பாட்டின் மீதான வருமானம் 50.5% அதிகரித்து 2,881.2 கோடி ரூபாயாக உள்ளது.

இது இதற்கு முந்தைய நிதி ஆண்டின் இரண்டாவது காலாண்டில் 1,913.9 கோடி ரூபாயாக இருந்தது குறிப்பிடத்தக்கது. இந்த நிறுவனத்தின் அமெரிக்க வர்த்தகத்திலிருந்து கிடைக்கும் வருமானம் சென்ற நிதி ஆண்டின் இரண்டாவது காலாண்டில் 730.8 கோடி ரூபாயாக இருந்தது. இது தற்போது 1,174.3 கோடி ரூபாயாக உயர்ந்துள்ளது.  இன்றைய பங்குச் சந்தை முடிவில்  2.71% உயர்ந்து, 1,028.45 ரூபாயாக வர்த்தகமானது.

விகடன் இதழ்கள் மற்றும் இ-புத்தகங்களை உங்கள் மொபைலில் படிக்க புதிய Vikatan APP

MUST READ