Vikatan.com

www.vikatan.com would like to send you push notifications.

Notifications can be turned off anytime from browser settings.

சிண்டிகேட் வங்கியின் நிகர லாபம் 33% குறைவு!

சிண்டிகேட் வங்கி நடப்பு நிதி ஆண்டின் இரண்டாவது காலாண்டு முடிவை வெளியிட்டிருக்கிறது. 2013-14-ம் நிதி ஆண்டின் இரண்டாவது காலாண்டில் 470.12 கோடியாக இருந்த வங்கியின் நிகர லாபம், நடப்பு நிதி ஆண்டின் இரண்டாவது காலாண்டில் 315.60 கோடி ரூபாயாக குறைந்துள்ளது. அதே சமயம் வங்கியினுடைய வரி செலவு 100 மடங்கு அதிகரித்து 100.48 கோடி ரூபாயாக உள்ளது. இது இதற்கு முந்தைய நிதி ஆண்டின் இரண்டாவது காலாண்டில் 1.08 கோடி ரூபாயாக இருந்தது.

வங்கியின் வாராகடன் 2013-14-ம் நிதி ஆண்டின் இரண்டாவது காலாண்டில் 339.96 கோடி ரூபாயாக இருந்தது. இது நடப்பு நிதி ஆண்டின் இரண்டாவது காலாண்டில் 537.79 கோடியாக அதிகரித்துள்ளது. நிகர லாபம், வாராகடன் அதிகரிப்பு , வரிச் செலவு அதிகரிப்பு என்றிருந்தாலும் இந்த வங்கியின் மொத்த வருமானம் 4,850.35 கோடியிலிருந்து, நடப்பு நிதி ஆண்டின் இரண்டாவது காலாண்டில் 5,680.96 கோடி ரூபாயாக அதிகரித்துள்ளது. இன்று பங்குச் சந்தை முடியும்போது 2% குறைந்து 125.10 ரூபாய்க்கு வர்த்தகமானது. 
 

விகடன் இதழ்கள் மற்றும் இ-புத்தகங்களை உங்கள் மொபைலில் படிக்க புதிய Vikatan APP

MUST READ