Vikatan.com

www.vikatan.com would like to send you push notifications.

Notifications can be turned off anytime from browser settings.

ஏடிஎம் கார்டுகளை குறிவைக்கும் ஹேக்கர்கள்! தப்புவது எப்படி!

ஏடிஎம் கார்டுகளை குறிவைக்கும் ஹேக்கர்கள்!
தப்புவது எப்படி!
 
முன்பெல்லாம் உங்கள் பர்ஸில் உள்ள பணத்தை திருவிழா கூட்டத்தில் அடித்தும், பேருந்தில் பயணிக்கும் போதும் திருடினார்கள், பின்பு ஏடிஎம் கார்டு வந்துவிட்ட பின் பணத்தை ஏடிஎம் மையத்தில் நுழைந்தோ அல்லது பணத்தை எடுத்து கொண்டு செல்லும் வழியில் கைப்பற்றியோ பணத்தை திருடினர்.
 
இப்போது உலகம் எவ்வளவு தொழில்நுட்பமயமாகி திருட்டை தடுக்க நினைக்கிறதோ அதைவிட வேகமாக திருடுபவர்களும் வளர்கிறார்கள். ஏடிஎம் கார்டில் பணத்தை வைத்து எடுத்தால் தானே ஆபத்து நான் ஸ்வைப் செய்து பணத்தை எடுத்து கொள்வேன் என்பவரா நீங்கள் உங்களை தான் ஆன்லைன் ஹேக்க்கர்கள் குறிவைக்கிறார்கள். உங்களது ஆபத்து அவர்கள் தான்! என்ன ஆபத்துகள்? அதிலிருந்து தப்புவது எப்படி என்பதை பார்ப்போம்!
 
என்ன ஆபத்துகள்?
 
நீங்கள் எங்காவது பொது இடங்களுக்கு செல்லும் போது அங்கு உங்கள் கண் எதிரே ஏடிஎம் கார்டுகள் ஸ்வைப் செய்யப்படாமல் மறைவான இடங்களில் செய்யப்படலாம் அப்போது ஸ்கிம்மர் எனும் கருவியை பயன்படுத்தி உங்கள் கார்டை போன்ற போலிகார்டை 10 நிமிடத்தில் அவர்களால் உருவாக்க முடியும். உடனே இந்த தகவலை இன்டர்நெட் மூலம் வேறு மாநிலத்துக்கு அனுப்பி கூட அங்கு போலி கார்டை தயாரித்து உங்கள் பணத்தை திருட முடியும், 
 
நீங்கள் பயன்படுத்தும் கணினியில் பிஷ்ஷிங்(phishing) தொழில்நுட்பத்தின் மூலம் போலி இணையதள பக்கங்களை உருவாக்கி காட்சிபடுத்தி விடுகின்றனர். கணினி திரையில் ப்ரெளசர் அமைப்பில் தோன்று விளம்பரங்களை க்ளிக் செய்தால் அது நேரடியாக போலி தளத்திற்கு அழைத்து செல்லும் அங்கு நீங்கள் கொடுக்கும் உங்கள் ஏடிஎம்/கிரெடிட் கார்டு விவரங்களை இந்த போலி இணையதளங்கள் எங்கிருந்து வேண்டுமானாலும் எடுத்து கொள்ளும் விதத்தில் அமைத்திருக்கும். அப்போது உங்கள் விவரங்கள் அனைத்தும் திருடப்பட்டு அதனால் உங்களுக்கு பாதிப்பு ஏற்பட வாய்ப்புள்ளது
 
உங்கள் பணத்தை ஏடிஎம் இயந்தியத்தில் செலுத்தும் போது ஸ்கிம்மர் அமைப்பை உங்கள் கார்டை நுழைக்கும் இடத்தில் பொருத்தி தகவல்களையும், இயந்திர மேற்பக்கத்தில் உள்ள கேமராவை பொருத்தி பாஸ்வேர்டுகளை கூட திருடி விடுகிறார்கள்.
 
இவ்வளவு கூட ரிஸ்க் எடுக்க வேண்டாம். உங்கள் ஏடிஎம் கார்டின் ஜெராக்ஸ் காப்பி இருந்தாலே போதும்! உங்கள் கார்டை போலியாக தயாரித்து அதிலிருந்து தகவல்களையும், பணத்தையும் எளிதாக திருட முடியும்.
 
நீங்கள் ஆன்லைனில் பொருட்களை வாங்கும் இணையதளங்களின் உள் நுழைந்தும், பேமண்ட் கேட்வேக்கள் மூலமாக உள் நுழைந்தும் கூட உங்கள் கணக்கிலிருந்து பணத்தை திருட முடியும். இதற்கும் உங்களுக்கும் எந்த தொடர்பும் இருக்காது தான் என்றாலும் உங்கள் கணக்கிலிருந்து பணம் செல்வது என்னவோ உண்மைதான்!
 
தப்புவது எப்படி!
 
1. உங்கள் கார்டை பொது இடங்களில் பயன்படுத்தும் போது அவர்கள் உங்கள் பாஸ்வேர்டை கேட்டாலோ அல்லது உங்கள் கார்டை மறைவான இடத்தில் பயன்படுத்த எடுத்து சென்றாலோ கூடவே நீங்களும் செல்லுங்கள் இல்லையெனில் அவர்களிடம் உங்கள் கார்டை கொடுக்காதீர்கள்.
 
2.அவசரமாக வற்புறுத்தி நேரமாகிறது உங்கள் பின் நம்பரை கூறுங்கள் என்றால் ஒருபோதும்
 கூறாதீர்கள்.பொறுமையாக பர்சேஸ் செய்தால் உங்கள் பணம் பாதுகாக்கப்படும்.
 
3.ஏடிஎம் இயந்திரத்தில் பணம் எடுக்கும் முன் சாதாரணமாக அல்லாமல் ஏதாவது வித்தியாசமான கருவி பொறுத்தப்பட்டுள்ளதா என பார்த்து பின் பயன்படுத்துங்கள். உங்களுக்கு எதாவது வித்தியாசமாக தோன்றினால் அதனை வங்கியிடம் புகாராக உடனடியாக தெரிவியுங்கள்.
 
4.ஆன்லைன் ஷாப்பிங் டெலிவரிக்கு வருபவரிடம் கூட ஸ்கிம்மர் போன்ற கருவி பொருத்தப்பட்டுள்ளதா என பார்த்து ஏடிஎம் கார்டுகளை பயன்படுத்துவது நல்லது.
 
5.ஆன்லைனில் நம்பரை வழங்கும் போது விளம்பரங்கள் மூலம் இணையதளங்களுக்குள் செல்லாமல் நீங்களே அணுக வேண்டிய முகவரியை டைப் செய்தோ அல்லது கூகுளில் தேடியோ செல்வது நல்லது.
 
இந்த வழிகளை பின்பற்றி ஏடிஎம் கார்டுகளை ஹேக்கர்களிடம் இருந்து பாதுகாத்துக் கொள்ளுங்கள்!
 
ச.ஸ்ரீராம்

 

விகடன் இதழ்கள் மற்றும் இ-புத்தகங்களை உங்கள் மொபைலில் படிக்க புதிய Vikatan APP

MUST READ