Vikatan.com

www.vikatan.com would like to send you push notifications.

Notifications can be turned off anytime from browser settings.

[X] Close

என்எல்சி நிகரலாபம் 8% அதிகரிப்பு!


நெய்வேலி லிக்னைட் கார்பரேஷன் நிறுவனம் (என்எல்சி) நடப்பு நிதி ஆண்டின் இரண்டாம் காலாண்டு முடிவை வெளியிட்டது. இந்த நிறுவனத்தின் நிகரலாபம் 8% அதிகரித்து 259.35 கோடி ரூபாயாக உள்ளது. இது இதற்கு முந்தைய ஆண்டின் இதே காலாண்டில் 240 கோடி ரூபாயாக இருந்தது. 


 2013-14-ம் நிதி ஆண்டின் இரண்டாவது காலாண்டில் 1,382.82 கோடி ரூபாயாக இருந்த விற்பனை, 1,402.49 கோடி ரூபாயாக அதிகரித்துள்ளது. இந்த நிறுவனத்தின் பழுப்பு நிலக்கரி மொத்த உற்பத்தி திறன் 30.60 மில்லியன் டன்னாக இருக்கிறது. அதே போல தன்னுடைய மூன்று அனல் மின் உற்பத்தி நிலையங்கள் மூலம் 2,740 மெகா வாட் மின்சாரம் உற்பத்தியாகிறது. நடப்பு நிதி ஆண்டின் முதல் அரையாண்டில் இந்த நிறுவனம் உற்பத்தி செய்திருக்கும் மின்சாரம் 9,983.10 யூனிட்களாகும். 


நடப்பு நிதி ஆண்டின் ஏப்ரல்-செப்டம்பர் வரையிலான காலகட்டத்தில் இந்த நிறுவனத்தின் நிகரலாபம் 593.40 கோடி ரூபாயாக அதிகரித்துள்ளது. இது இதற்கு முந்தைய நிதியாண்டின் முதல் அரையாண்டில் 518.43 கோடி ரூபாயாக இருந்தது.

உங்கள் கருத்தைப் பதிவு செய்யுங்கள்

விகடன் இதழ்கள் மற்றும் இ-புத்தகங்களை உங்கள் மொபைலில் படிக்க புதிய Vikatan APP
Advertisement
Advertisement

MUST READ

Advertisement
Advertisement
[X] Close