Vikatan.com

www.vikatan.com would like to send you push notifications.

Notifications can be turned off anytime from browser settings.

[X] Close

இந்தியாவில் அடியெடுத்து வைக்கும் பர்க்கர் கிங்!

 
அமெரிக்காவின் முன்னணி ஃபாஸ்ட் புட்  நிறுவனமான பர்கர் கிங்  இந்தியாவில் தனது உணவகங்களை தொடங்க உள்ளது. இது குறித்து செய்தி வெளியிட்டுள்ள அந்த நிறுவனம் இந்தியாவில் முதற்கட்டமாக அடுத்த 6 மாதங்களுக்குள்  12 கிளைகளை திறக்க உள்ளதாக தெரிவித்துள்ளது. 
 
'' வேகமாக வளர்ந்து வரும் இந்தியச் சந்தையில் கால்பதிக்க உள்ளது மகிழ்ச்சி அளிப்பதாக உள்ளது என்றும்,  இந்தியச் சந்தையை கருத்தில் கொண்டு மட்டன், சிக்கன், வெஜ் பர்க்கர் மற்றும் சான்விட்ஜ் என எங்களது மெனுக்களில் மாற்றம் கொண்டு வந்துள்ளோம்'' என இந்த நிறுவனத்தின் இந்திய பிரிவின் தலைமை செயல் அதிகாரி  ராஜீவ் வர்மன் தெரிவித்துள்ளார்.
 
சீனா, ரஷ்யா மற்றும் துருக்கி நாடுகளில் சுமார் 100 க்கும் மேற்பட்ட கிளைகளை இந்த ஆண்டு தொடங்கிய பர்கர் கிங் இந்த ஆண்டின் இறுதியில்தான் இந்தியாவில் அடியெடுத்து 
வைக்க இருக்கிறது.  
 
இந்த செக்டாரில் இந்தியச் சந்தையை ஏற்கனவே மெக்டொனால்டு இறங்கி வெற்றி கண்டுள்ளது. குறிப்பாக இரண்டாம் நிலை, மூன்றாம் நிலை நகரங்களிலும் மெக்டொனால்டு கிளைகள் உள்ளன.
 

உங்கள் கருத்தைப் பதிவு செய்யுங்கள்

விகடன் இதழ்கள் மற்றும் இ-புத்தகங்களை உங்கள் மொபைலில் படிக்க புதிய Vikatan APP
Advertisement
Advertisement

MUST READ

Advertisement
Advertisement
[X] Close