Vikatan.com

www.vikatan.com would like to send you push notifications.

Notifications can be turned off anytime from browser settings.

[X] Close

சன் டிவி நிகரலாபம் 8.68% குறைவு!

சன் டிவி சமீபத்தில் நடப்பு நிதி ஆண்டின் இரண்டாவது காலாண்டு முடிவை வெளியிட்டது. இதில் தனது நிறுவனத்தின் நிகர லாபம் 8.68% குறைந்து 154.47 கோடி ரூபாயாக உள்ளது. இது இதற்கு முந்தைய நிதி ஆண்டின் இதே காலாண்டில் 169.16 கோடி ரூபாயாக இருந்தது. அதே சமயம் நிறூவனத்தின் மொத்த வருமானம் 9.13% அதிகரித்து 509.02 கோடி ரூபாயாக உள்ளது. இது இதற்கு முந்தைய நிதி ஆண்டின் இதே காலகட்டத்தில் 466.41 கோடி ரூபாயாக இருந்தது. இந்த நிறுவனத்தின் நிகரலாபம் நடப்பு நிதி ஆண்டின் முதல் அரையாண்டில் 4.04% குறைந்து 320.11 கோடி ரூபாயாக உள்ளது. இது இதற்கு முந்தைய நிதி ஆண்டின் இதே அரையாண்டில் 333.60 கோடி ரூபாயாக இருந்தது.

நிறுவனத்தின் நிகர விற்பனை நடப்பு நிதி ஆண்டின் முதல் அரையாண்டில் 6.95% அதிகரித்து 1,142.60 கோடி ரூபாயாக உள்ளது. இது இதற்கு முந்தைய நிதி ஆண்டின் இதே காலகட்டத்தில் 1,068.26 கோடி ரூபாயாக இருந்தது. இந்த நிறுவனம் தனது முதலீட்டாளர்களுக்கு 2.25 ரூபாய் இடைக்கால டிவிடெண்ட் வழங்குவதாக ஒப்புதல் அளித்திருக்கிறது.
 

உங்கள் கருத்தைப் பதிவு செய்யுங்கள்

விகடன் இதழ்கள் மற்றும் இ-புத்தகங்களை உங்கள் மொபைலில் படிக்க புதிய Vikatan APP
Advertisement
Advertisement

MUST READ

Advertisement
Advertisement
[X] Close