Vikatan.com

www.vikatan.com would like to send you push notifications.

Notifications can be turned off anytime from browser settings.

ஏற்றத்தில் முடிந்த பங்குச் சந்தை!

இன்றைய பங்குச் சந்தை ஏற்ற இறக்கத்துடன் காணப்பட்டது. சந்தை முடியும்போது மும்பை பங்குச் சந்தையான சென்செக்ஸ் 6.10 புள்ளிகள் உயர்ந்து 27874.73 (0.02%) நிலையில் முடிவடைந்தது. அதே போல தேசிய பங்குச் சந்தை 7.25 புள்ளிகள் உயர்ந்து 8344.25 (0.09%) நிலையில் முடிவடைந்திருக்கிறது.


டாப் 5: விலை ஏற்ற பங்குகள்!

ஐடிசி                                                    -371.70        4.51%
பேங்க் ஆஃப் பரோடா                    -985.05        2.35%
பவர் கிரிட் கார்ப்                             -148.10        2.21%
டாடா பவர்                                        - 93.35          2.19%
சன் பார்மா                                         - 911.25      1.90%

 
டாப் 5: விலை இறக்கப் பங்குகள்!

ஓஎன்ஜிசி                                           - 394.20       (-3.77%)
ஜிண்டால் ஸ்டீல்                           -155.75        (-3.56%)
ஹிண்டால்கோ                              - 152.00       (-2.63%))
லார்சன் அண்டு டர்போ               - 1,619.40    (-2.08%)
டாடா மோட்டார்ஸ்                      - 522.30        (-2.07%)
 
 
2.30 மணி நிலவரம்:
 
ஏற்ற இறக்கத்துடன் வர்த்தகமாகி வரும் இன்றைய பங்குச் சந்தை, மதியம் 2.30 மணி நிலவரப்படி சென்செக்ஸ் 32.43 புள்ளிகள் உயர்ந்து 27896.48 (0.10%) என்கிற நிலையில் வர்த்தகமாகி வருகிறது. அதே போல நிஃப்டி சந்தை 7.65 புள்ளிகள் உயர்ந்து 8344.65 (0.09%) என்கிற நிலையில் வர்த்தகமாகி வருகிறது.

இந்த நிலையில் பிஎஸ்இ குறியீடுகளான அட்டோ, கேப்பிட்டல் கூட்ஸ், ஐடி, மெட்டல் மற்றும் ஆயில் அண்டு கேஸ் ஆகியவை இறக்கத்தில் வர்த்தகமாக, கன்ஸ்யூமர் டியூரபிள், எஃப்எம்சிஜி, ஹெல்த்கேர் ஆகியவை ஏற்றத்தில் வர்த்தகமாகி வருகின்றன.

நிறுவனப் பங்குகள் அடிப்படையில், ஐடிசி, பேங்க் ஆஃப் பரோடா, சன்பார்மா, பிஹெச்இஎல் மற்றும் ஹீரோ மோட்டோ கார்ப் நிறுவன பங்குகள் ஏற்றத்திலும், ஜிண்டால் ஸ்டீல், ஓஎன்ஜிசி, ஹிண்டால்கோ, லார்சன் அண்டு டர்போ மற்றும் டாடா மோட்டார்ஸ் ஆக்கிய நிறுவன பங்குகள் இறக்கத்திலும் வர்த்தகமாகி வருகின்றன.
 
மதியம் 1.00 மணி நிலவரம்.

 வாரத்தொடக்க நாளான இன்று காலை சந்தை  ஏறுமுகத்தில் தொடங்கியது.  காலை 10 மணி அளவில் 28,000 என்ற புதிய உச்சத்தை கடந்து வர்த்தகமானது.  

அதன் பிறகு மெல்ல சந்தை சரிய துவங்கி  27,790 என்ற நிலையில் வர்த்தகமாகி வருகிறது. மதியம் 01.00  மணியளவில் மும்பை பங்குச் சந்தையான சென்செக்ஸ் 80 புள்ளிகள் சரிந்து 27887 என்ற நிலையிலும், தேசிய பங்குச் சந்தையான நிஃப்டி 28 புள்ளிகள் சரிந்து 8324 என்ற நிலையிலும் வர்தகமாகி வருகிறது.

 
இன்றைய வர்த்தகத்தில் எஃப் எம்சிஜி, ஹெல்த்கேர், ஸ்மால் கேப், மிட்கேப் ஆகிய துறை பங்குகளுகள் விலை அதிகரித்தும், ஐடி, மெட்டல் துறைகளின் பங்குகள் வீழ்ச்சியடைந்தும் வர்த்தகமாகி வருகிறது.  கோல் இந்தியாவின் காலாண்டு முடிவு வெளியாகி உள்ளது. இதில் அதிக செலவுகளின் காரணமாக இந்த நிறுவனத்தின் லாபம் 28 சதவிகிதம் குறைந்துள்ளது. 
 
 
காலை 11.30 மணி நிலவரம்.
 
  இன்று காலை இந்தியா சந்தைகள் ஏற்றத்தில் துவங்கிது. மேலும் 28,000 என்ற புதிய உச்சத்தை கடந்து வர்த்தகமாகி வந்தது. அதன் பிறகு மெல்ல சந்தை சரிய துவங்கி மீண்டும் 27,800 என்ற நிலையில் வர்த்தகமாகி வருகிறது. காலை 11.30 மணியளவில் மும்பை பங்குச் சந்தையான சென்செக்ஸ் 33 புள்ளிகள் சரிந்து 27835 என்ற நிலையிலும், தேசிய பங்குச் சந்தையான நிஃப்டி 13 புள்ளிகள் சரிந்து 8324 என்ற நிலையிலும் வந்தகமாகி வருகிறது. 
இன்றைய வர்த்தகத்தில் எஃப் எம்சிஜி, ஹெல்த்கேர், ஸ்மால் கேப், மிட்கேப் ஆகிய துறை பங்குகளுகள் விலை அதிகரித்தும், ஐடி, மெட்டல் துறைகளின் பங்குகள் வீழ்ச்சியடைந்தும் வர்த்தகமாகி வருகிறது. 
கோல் இந்தியாவின் காலாண்டு முடிவு வெளியாகி உள்ளது. இதில் அதிக செலவுகளின் காரணமாக இந்த நிறுவனத்தின் லாபம் 28 சதவிகிதம் குறைந்துள்ளது. 
 
 
சென்செக்ஸ் 28000! புதிய உச்சத்தில் பங்குச் சந்தைகள்!
 
இன்று காலை ஏற்றத்துடன் துவங்கிய பங்குச் சந்தைகள் புதிய உச்சத்தை தொட்டு வர்த்தகமாகி வருகின்றன. மும்பை பங்குச்சந்தையான சென்செக்ஸ் 28000 புள்ளிகளை கடந்து வர்த்தகமானது. இன்று காலை 9:30 மணி நிலவரப்படி சென்செக்ஸ் 152 புள்ளிகள் அதிகரித்தும், நிஃப்டி 43 புள்ளிகள் அதிகரித்தும் வர்த்தகமாகி வருகிறது.
 
அமெரிக்க டாலருக்கு நிகரான இந்திய ரூபாயின் மதிப்பு 61.48 ரூபாயாக உள்ளது.10 கிராம் தங்கத்தின் விலை 1.85 சதவிகிதம் அதிகரித்து 25,932 ரூபாய் என்ற அளவில் வர்த்தகமாகி வருகிறது.
 
இந்த ஏற்றத்திற்கு மத்திய அமைச்சரவையில் ஏற்பட்டுள்ள மாற்றங்களும், டாலருக்கு எதிராக இந்திய ரூபாயின் மதிப்பு அதிகரித்துள்ளதுமே காரணங்களாக கூறப்படுகின்றன.இன்று 1092 பங்குகள் விலை அதிகரித்தும், 452 பங்குகள் விலை குறைந்தும் வர்த்தகமாகின. குறிப்பாக சன்பார்மா, ஐடிசி, கோல் இந்தியா பங்குகள் விலை அதிகரித்தும், ஏர்டெல், டெக் மஹிந்த்ரா பங்குகள் விலை குறைந்தும் வர்த்தகமாகி வருகின்றன.
விகடன் இதழ்கள் மற்றும் இ-புத்தகங்களை உங்கள் மொபைலில் படிக்க புதிய Vikatan APP

MUST READ