Vikatan.com

www.vikatan.com would like to send you push notifications.

Notifications can be turned off anytime from browser settings.

இந்தியாவின் சக்தி வாய்ந்த பெண் அருந்ததி பட்டாச்சார்யா!

 இந்தியாவின் சக்தி வாய்ந்த பெண் அருந்ததி பட்டாச்சார்யா!

இந்தியாவின் மிகப் பெரிய பொது துறை வங்கியான எஸ்பிஐயின் சேர்மன் அருந்ததி பட்டாச்சார்யா அதிக சக்தி வாய்ந்த பிசினஸ் பெண் என ப்ர்ச்சூன் பத்திரிக்கை வெளியிட்டுள்ளது. இந்த பத்திரிக்கை சக்தி வாய்ந்த 50 பெண்களின் பெயரை வெளியிட்டுள்ளது. இதில் புதிதாக 8 பெண்கள் இடம் பிடித்துள்ளார்கள். இதில் முதல் பத்து இடங்களில் அருந்ததி பட்டாச்சார்யா மற்றும் ஹெச்பிசிஎல் நிறுவனத்தின் சேர்மன் நிஷி வாசுதேவ் ஆகியோர் புதியவர்கள்.
ஐசிஐசிஐ வங்கியின் சேர்மன் சந்தா கோச்சர், ஆக்ஸிஸ் வங்கியின் ஷிகா சர்மா ஆகியோர் முறையே இரண்டாவது, மூன்றாவது இடங்களை பிடித்துள்ளார்கள். 
அருந்ததி பட்டாச்சர்யா வாராக் கடன்  வசூலிப்பதில் அதிக ஆர்வத்துடன் செயல்பட்டுள்ளார். சொத்துகளை தரம் உயர்த்தியது ஆகிய காரணங்களால் இவரின் பெயர் இந்த பட்டியலில் இடம் பெற்றது என்பது குறிப்பிடதக்கது. 
விகடன் இதழ்கள் மற்றும் இ-புத்தகங்களை உங்கள் மொபைலில் படிக்க புதிய Vikatan APP